Categories: Cinema News latest news

உங்க புருஷனை விட விஜய் பெட்டர்!.. ரசிகரின் கமெண்ட்டுக்கு ஜோ ரியாக்‌ஷன் பாருங்க!…

Jyotika: மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர் ஜோதிகா. 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்த நக்மாவின் தங்கை இவர். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி படத்தில் ஒரு சின்ன வேடத்திலும், வஸந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.

முன்னணி நடிகை: சிம்ரனை போலவே இவருக்கும் ரசிகர்கள் உருவாகினார்கள். சிம்ரனுக்கு இடுப்பழகும், நடனமும் என்றால் ஜோதிகாவுக்கு அவர் முகத்தில் காட்டும் ரியாக்‌ஷன்கள்தான் அவரின் பலம். அதன்பின் முன்னணி நடிகையாக மாறி பல படங்களிலும் நடித்தார். விஜய், சூர்யா, அர்ஜூன், கமல் என பலருடனும் நடித்தார். விஜயுடன் குஷி, திருமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்,

சூர்யாவுக்கு ஜோடி: சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்தார். எல்லோருடனும் நடித்தாலும் சூர்யாவுக்கு ஜோடியாக பல படங்களிலும் நடித்தார். இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததால் இயக்குனர்களும் இருவரையும் வைத்து பல படங்களை எடுத்தார்கள். சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகாவும் ஒரு காரணமாக இருந்தார்.

சூர்யாவுடன் காதல்: இதனால் ஜோதிகா மீது சூர்யாவுக்கு காதலும் ஏற்பட்டது. சில வருடங்கள் காத்திருந்து பெற்றோரின் சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் பல வருடங்கள் ஜோதிகா நடிக்கவில்லை.

அதன்பின் 36 வயதினிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். முன்பு போல் இல்லாமல் நல்ல கதை, கணமான கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடிக்க ஒப்புகொள்கிறார். இப்போது சூர்யாவும், ஜோதிகாவும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு ஆர்வக்கோளாறு விஜய் ரசிகர் ஜோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர் கமெண்ட்: ‘உங்கள் கணவரை விட விஜயே சிறந்தவர்’ என அந்த ரசிகர் பதிவிட, ஜோதிகா அதற்கு சிரிப்பது போல ஸ்மைலி ஒன்றை போட்டார். உடனே பதறிய அந்த ரசிகர் ‘சாரி மேம் சூர்யா சார்’ என பதிவிட்டு ஹார்ட்டினை போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். உனக்கு இதெல்லாம் தேவையா? என ரசிகர்கள் கமெண்ட்டு போட்டு வருகிறார்கள்.

Published by
சிவா