Connect with us

Cinema News

அந்த விஷயத்துல விஜய் தான் நம்பர் 1… கட்சியில ஒரு கோடி உறுப்பினர்களாமே..!

தமிழ் சினிமா உலகில் விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகனை அறிவித்துள்ளார். இது அவரது 69வது படம். தொடர்ந்து அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போகிறார். 2026ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப்பிடித்தே தீருவது என்ற லட்சியத்தில் இருக்கிறார். அதற்காக இப்போது நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டார்.

சினிமாவில் மார்க்கெட் குறைந்த காலகட்டத்தில் தான் எம்ஜிஆர் உள்பட அங்கிருந்து அரசியலுக்குப் பலரும் வந்தார்கள். அதே போல கூடியிருக்கும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறும் என்று எண்ண முடியாது. அதற்கு திருப்பதியில் கூடிய கூட்டமும், சிரஞ்சீவியும் ஒரு உதாரணம்.

இந்திய அளவில் டாப் பர்சனாலிட்டி யார் என்று குளோபல் என்ற அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் விஜய்க்கு 53 சதவீதமும், முதல்வர் ஸ்டாலினுக்கு 43 சதவீதமும் என்று தெரியவந்தது.

சினிமாவில் பீக்கில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தவர் யார்னா அது விஜய்தான். 250 கோடி சினிமாவில் சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கும்போது அதை விட்டுட்டு அரசியலுக்கு வந்ததனால்தான் அவருக்கு மிகப்பெரிய இளைஞர் கூட்டம் வந்தது. பிரஸ்மீட்டே இதுவரை கொடுக்கலன்னு சொன்னாங்க.

அந்த வகையில் அதை எல்லாம் விடுங்க. அது விஜய் எடுக்குற முடிவு. 1 கோடி உறுப்பினர்களை ஆன்லைனில் சேர்ப்பது என்பதை டார்கெட்டாக விஜயின் தவெக கட்சி வைத்திருந்தது. அதுவே சொன்ன மாதிரி ஒரு கோடியை ரீச் பண்ணி விட்டது. அதெல்லாம் முடியாதுன்னு சொன்னவர்களுக்கோ மிகப்பெரிய ஆச்சரியம்.

விக்கிரவாண்டி மாநாடு, கோவை ரோடு ஷோ என இரண்டு இடங்களிலும் அவருக்கு வந்த கூட்டம் கட்டுக்குள் அடங்காதது. மக்களுக்காக எந்த ஒரு பிரச்சனைக்கு விஜய் பேசினாருன்னு கேள்வி எழுகிறது.

இன்னும் பல ஊர்களில் முதியவர்கள், மற்றவர்கள் என மிகவும் பின்தங்கிய இடங்களில் கட்சி போய் சேரலையாம். அதை விஜய் மிகத் திறமையாகக் கச்சிதமாக செய்து முடித்து விட்டால் 2026ல் விஜய் கணிசமான வாக்குகளை அள்ளுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

விஜய் தன்னை மக்கள் முன்னாடி எப்போது எங்கு கொண்டு சேர்க்கப் போகிறார் என்ற கேள்விக்குப் பதில் ஜூன் முதல் வாரத்தில் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top