Connect with us

Cinema News

ரியல் ராக்கிபாய்.. ரீ ரிலீஸில் மாஸ் காட்டும் மெர்சல்.. ஃபுல் செலிபிரேஷன் மோடுதான்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் மெர்சல். இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. படம் வெளியான போது மெர்சல் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படம் என்றும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த படம் என்றும் பலவகையில் ட்ரோல் செய்து வந்தனர். ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ விஜய் வைத்து முதன் முறையாக தெறி படத்தை எடுத்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் மெர்சல். இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருப்பார். அரசியல் விஷயங்கள் பலவற்றை இந்த படத்தில் பேசி இருப்பார் விஜய். படம் முழுக்க ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படமாக தான் அமைந்தது .படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் இருந்தது.

விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். நாளை மறுநாள் விஜய் பிறந்தநாள் என்பதால் இப்போதிலிருந்து விஜய் ரசிகர்கள் செலிப்ரேஷன் மோடுக்கு வந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் விஜயின் கட் அவுட்டுகளை வைத்து பால் அபிஷேகம் மாலை எல்லாம் அணிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதுதான் அவருடைய கடைசி படம். அதனால் இந்த பிறந்தநாள் விஜய்க்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷலான பிறந்த நாளாக இருக்கும். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் தனுஷின் குபேரா திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை விட மெர்செல் திரைப்படத்திற்கு தான் அதிக கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

mersal

mersal

மெர்சல் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்த திரையரங்குகள் முழுவதுமே ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்ல கேரளாவிலும் இந்த படத்திற்கு ஒரு பெரிய வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. ஏற்கனவே கேரளா விஜயின் கோட்டை என அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் மெர்சல் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து கேரளா ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறார் விஜய்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top