Actor Vijay:சினிமாவை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம்தான் ஒருவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த அதிர்ஷ்டம் மட்டும் இல்லையென்றால் என்னதால் கடுமையான உழைப்பு போட்டாலும் நம்மை பின்னுக்கு தள்ளி வேடிக்கை பார்க்கும். அதுவும் ஒரு கதையை ரெடி பண்ணுகிறார்கள் என்றால் ஒன்று ஒரு ஹீரோவை மனதில் வைத்து எழுதுவார்கள். அல்லது போகிற போக்கில் கிடைக்கக் கூடிய ஒரு ஹீரோவை வைத்து அந்த படத்தை எடுத்துவிடுவார்கள்.
இதில் அந்த கதை மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டால் யாரும் அந்த இயக்குனரையோ அல்லது கதையாசிரியரையோ புகழ்வதில்லை. படத்தில் நடித்த ஹீரோவைத்தான் முதலில் பாராட்டி பேசுவார்கள். அந்த வகையில் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ் இயக்கிய முதல் படம் தினந்தோறும். முரளியை வைத்து அந்த படத்தை எடுத்தார். முதல் படமே பெரிய வெற்றி.
அதன் பிறகு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் குடிக்கு அடிமையாகி இன்று அவருடைய வாழ்க்கையையே இழந்திருக்கிறார். அவர் கௌதம் மேனனுக்கு நெருங்கிய நண்பரும் கூட. கௌதம் மேனன் இயக்கிய மின்னலே மற்றும் காக்க காக்க போன்ற படங்களில் திரைக்கதை எழுதியவர். காக்க காக்க படத்தை முதலில் விஜய்க்காகத்தான் எழுதியிருக்கிறார்கள்.
அந்தப் படத்தின் கதையை எஸ்.ஏ.சி மற்றும் விஜயிடம் சொல்ல எஸ்.ஏ.சிக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். வழக்கம் போல் இருக்கும் போலீஸ் கதைதானே என்று சொல்லி நிராகரித்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் காக்க காக்க என்ற தலைப்பு முன் பின் குறிப்பு என்றுதான் தலைப்பு வைத்திருந்தார்களாம். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்துதான் கலைப்புலி எஸ்.தாணு உள்ளே வந்து சூர்யா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
kakka kakka
காக்க காக்க படம் தான் சூர்யாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இந்தப் படத்திற்கு பிறகு சூர்யாவை ஜோதிகா மட்டுமில்ல பெண் ரசிகைகளும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
Devara 2:…
Kaithi 2:…
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…