Categories: Cinema News latest news

தேர்தல்ல வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவாங்க… என்ன செய்யப் போறீங்க? மாணவர்கள் மத்தியில் விஜய்

இன்று சென்னையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் கல்வி திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பரிசளித்து வருகிறார். இந்த விழாவில் விஜய் பேசியது மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சி உரையாகவே இருந்தது. இது ஒரு அட்வைஸ் மாதிரியே இருந்தது.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பணத்தை வாங்கிட்டு ஓட்டுப் போடுவதை ஊக்குவிக்காதீங்க. அதைப் புறந்தள்ளுங்கன்னு சொல்கிறார். குறிப்பாக ஜாதி, மதப் பிரிவினை வேண்டாம். தந்தை பெரியாருக்கே ஜாதிச்சாயம் பூச முயற்சி பண்ணினாங்க என்றும் விஜய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசியது இதுதான்.

படிப்புல சாதிக்கணும்னா படிப்பும், சாதனையும்தான். ஒரே ஒரு படிப்புல மட்டும் நாம் சாதிக்கணும்னு ஒண்ணும் கிடையாது. நீட் மட்டும்தான் உலகமா? அதைத் தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரிசு. அதுல சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. டெமோக்ரசி இருந்தா தான் இந்த உலகம் தெரியும். உலகத்துல இருக்குற எல்லா விஷயமும் தெரியும்.

ஜனநாயக கடமையை பெரிதாக செய்றதுன்னா பெரிய விஷயம் கிடையாது. நல்லவங்க, நம்பிக்கையானவங்க, இதுவரைக்கும் ஊழலே செய்யாதவங்களைப் பார்த்து தேர்ந்தெடுங்க. காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சடலாம்னு நினைக்கிறாங்க. அந்த கல்ச்சரையே ஒழிச்சிடுங்க. அடுத்த வருஷம் வண்டி வண்டியா பணத்தைக் கொண்டு வந்துக் கொட்டப்போறாங்க.

அது அத்தனையும் உங்க கிட்ட கொள்ளை அடிச்ச பணம்தான். என்ன செய்யப் போறீங்க? அதை நான் சொல்லத் தேவையில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை உங்களுக்குப் பிடிச்ச துறையைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீங்க. அவங்க அவங்களுக்குப் பிடிச்ச துறையைப் படிக்க வைங்க. எவ்வளவோ பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமான்னு பாசிடிவா எதையும் நினைங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v