Categories: Cinema News latest news television

என்னது ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளா? ட்ரிபிள் சந்தோஷத்தில் விஜய் டிவி புகழ்

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் புகழ். கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த புகழ் அந்த நிகழ்ச்சியில் பல காமெடி காட்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருடைய அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானித்தது. அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவே படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இன்று பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவரும் புகழ் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை ரசிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கிறார். அவர் ஒரு வளர்ப்பு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்து இருக்கிறதாம் . தன்னுடைய நாய் அதன் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார் புகழ்.

ஒரு பக்கம் மக்களை ரசிக்க வைத்து வந்தாலும் இன்னொரு பக்கம் விஜயகாந்த் மீது உள்ள ஈடுபாட்டால் நாள்தோறும் தன்னுடைய அலுவலகத்தில் 100 பேருக்கு அன்னதானம் வழங்கியும் வருகிறார் புகழ். மேலும் சிறு சிறு கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்