Connect with us

Cinema News

அந்த விஷயங்கள்ல விஜயகாந்தும், விஜய்சேதுபதியும் ஒண்ணுதான்… நடிகை ஃபீலிங்க் செமயா இருக்கே!

தமிழ்த்திரை உலகில் ஆரம்பகாலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்து முன்னுக்கு வந்தவர் விஜயகாந்த். பின்னாளில் அவரது தனித்திறனை வளர்த்துக்கொண்டு பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தார்.

கருப்பு எம்ஜிஆர்: கேப்டன், கருப்பு எம்ஜிஆர் என்றெல்லாம் மக்கள் அவரை புகழ ஆரம்பித்தனர். கைமாறு கருதாமல் பல உதவிகளைச் செய்தார். தன்னை வந்து பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பசியைத் தான் முதலில் போக்குவார். அதன்பிறகே தன்னை வந்து சந்திக்கச் சொல்வார்.

பழகுவதில் எளிமை: அதேபோல திரையுலகில் நுழையும் ஆரம்பகாலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்து வந்தவர்தான் நடிகர் விஜய்சேதுபதி. இவரது அயராத உழைப்பும், அவருக்கு உரிய தனித்திறனும்தான் அவரை சினிமா உலகில் படிப்படியாக முன்னேற்றத்தைக் கொண்டு வந்தன. இரு நடிகர்களுமே பழகுவதில் எளிமையானவர்கள். தயாரிப்பாளர்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காதவர்கள்.

மகாராஜா: யதார்த்தமான நடிப்பைக் கொடுத்த விஜய் சேதுபதியை ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று கொண்டாடினார்கள். அவரது மகாராஜா படம் சீனா வரை போய் மாஸ் காட்டியது. இருவருமே தனக்கு என்று ஒரு வைராக்கியத்தை வைத்துக் கொண்டு படிப்படியாக சினிமாவில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்று விடாமுயற்சி செய்து முன்னேறியவர்கள் என்றால் மிகையில்லை.

பிக்பாஸ் சீசன்: அந்தக் காலகட்டத்தில் கமல், ரஜினிக்குப் பிறகு 3வது இடத்துக்கு கடும்போட்டி நடந்தது. அப்போது விஜயகாந்த் சர்வசாதாரணமாக அந்த இடத்தைப் பிடித்தார். அதேபோல கமலுக்குப் பிறகு பிக்பாஸ் சீசனை யார் நடத்துவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு சிம்பு உள்பட பலரையும் இவர்தான் பொருத்தமாக இருப்பார். கமல் இடத்தை நிரப்புவார் என்றனர்.

விஜய்சேதுபதி: ஆனால் விஜய்சேதுபதி அந்த பொறுப்பை கனகச்சிதமாக செய்து முடித்தார். ஆரம்பத்தில் பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோதும் நிகழ்ச்சி முழுவதும் தாக்குப்பிடித்து வெற்றிகரமாக நிறைவு செய்தார் விஜய்சேதுபதி.

ஒரு படம் தோல்வி என்றாலும் தளராமல் அடுத்த படத்தில் நடித்து சூப்பர்ஹிட்டைக் கொடுத்து விடுகிறார். தற்போது நடிகை வடிவுக்கரசி விஜய்சேதுபதியை தன் மகனாக பாவித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் ஃபீலிங்கோடு என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.

எனக்கு பிள்ளை: என்னை பொருத்தவரை விஜயகாந்த் சாரிடம் என்னென்ன குணங்கள் இருந்ததோ அவை எல்லாம் விஜய் சேதுபதியிடமும் இருக்கிறது. ஜனங்களை ஒண்ணு சேர்க்குறது, அவர்களிடம் பழகுற விதம், ஆர்டிஸ்ட் கிட்ட பழகுற விதம். அது பெரிய ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் சரி. சின்ன ஆர்டிஸ்டாக இருந்தாலும் சரி. ஒரே மாதிரி மரியாதை கொடுப்பது. அது எல்லாமே விஜய்சேதுபதி கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதால அவர் எனக்கு பிள்ளை என்கிற பீல் இருக்கு என்கிறார் நடிகை வடிவுக்கரசி.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top