Connect with us

Cinema News

36 மணி நேரமா தூங்காம விஜயகாந்த் நடிச்சிருக்காரு… ஆனா படைத்தலைவனை யாரும் கண்டுக்கலையே?!

விஜயகாந்த் குறித்து பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். அவரோட தயாரிப்புல 1996ல் விஜயகாந்த் அலெக்சாண்டர் படத்தில் நடித்தார். கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். ரஜினி, கமலுக்குப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இவர்தான். அந்த வகையில் அலெக்சாண்டர் படத்தில் விஜயகாந்த், சங்கீதா உள்பட பலர் நடித்துள்ளனர். கேயார் இயக்கியுள்ளார்.

அந்தப் படத்து கதை விஜயகாந்துக்குப் பிடிக்கல. அவர் எப்படி சொல்றதுன்னு தெரியல. அதனால மகன் சுப்புவிடம் கதை ஒண்ணும் சரிபட்டு வரலன்னு சொல்கிறார். நான் சொல்லாத மாதிரி நீங்க அப்பாக்கிட்ட சொல்ல முடியுமான்னு கேட்குறார் விஜயகாந்த்.

அதை பஞ்சு மகனிடம் ராவுத்தர் கேட்கிறார். பஞ்சுவிடம் போய் அதை எல்லாம் சொல்லமுடியாது. நான் பார்த்துக்கறேன்னு சொல்லிடுறாரு. உடனே விஜயகாந்தை காம்ப்ரமைஸ் செய்து நடிக்க வைக்கிறார். படத்துல கன்டெய்னர் பைட் ஒண்ணு எடுத்தாங்க. எக்ஸ்பிரஸ் அவென்யுவா இப்போ இருக்கு.

அது அப்போ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆபீஸா இருந்தது. அங்கே ஒரு இன்டோர்ல தொடர்ந்து சூட்டிங். ரிலீஸ் டேட் நெருங்கிட்டதால 36 மணி நேரம் விஜயகாந்த் தூங்காம நடிச்சிக் கொடுத்தார். பஞ்சு அருணாச்சலம் மகன் பிரகாஷ்ராஜை 5 மணி நேரம் ரெஸ்ட் எடுங்கன்னு அனுப்புவாரு. இன்னொரு ஆர்டிஸ்டை 4 மணி நேரம் தூங்கிட்டு வாங்கன்னு சொல்வாரு. ஆனா விஜயகாந்த் தூங்கவே மாட்டாராம்.

அடுப்புல வெந்நீர் கொதிச்சிக்கிட்டு இருக்குமாம். டயர்டா ஆனாருன்னா அதுல இருந்து நாலு சொம்பை தலையில ஊத்திக்கிட்டு வேட்டியைக் கட்டிட்டு நிப்பாராம். ஷாட் ரெடியானதும் டிரஸ் எல்லாம் போட்டுட்டு நடிச்சிக் கொடுத்துடுவாராம். ஒரு கட்டத்துல முகம், கண் எல்லாம் சிவக்க ஆரம்பிச்சிடுச்சாம். ஒரு படம் டிலே ஆகிடக்கூடாது. சொன்ன டேட்ல படம் ரிலீஸ் ஆகணும்கறதுக்காக உடலை வருத்தி விஜயகாந்த் நடித்த படம்தான் அது.

இது மாதிரி விஜயகாந்த் எவ்வளவோ பேருக்கு உதவி பண்ணிருக்காரு. இன்னைக்கு அவரது வாரிசு சண்முகப்பாண்டியன் நடித்த படைத்தலைவன் படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல். அது தவிர கடைசி நேரத்துல 10 கோடி கொடுத்தாகணும்னு நெருக்கடி. அது தவிர படத்துக்கு பெரிய பப்ளிசிட்டி இல்லை என பல விஷயங்களைச் சொன்னாங்க.

அதனால கடந்த 23ம் தேதி படம் வெளியாகாமல் போனது. விஜயகாந்த் இந்தத் திரை உலகிற்கு எவ்வளவோ விஷயங்கள் செய்துள்ளார். ஆனால் அவரது மகன் படத்துக்கு வரும் சிக்கலை யாருமே தீர்க்க முன்வரலயே என்ற கேள்வி எழுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top