Connect with us

Cinema News

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்த ஷோபா! வைரலாகும் வீடியோ

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கட்டிய சாய்பாபா கோயிலில் விஜயின் தாய் ஷோபா சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி விஜய்க்காக பிரார்த்தனை செய்திருக்கிறார். அந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. கடந்த ஆண்டு கொரட்டூரில் தாய் சோபாவின் ஆசைக்காக சாய்பாபா கோயிலை கட்டி கொடுத்தார் விஜய். அதில் சிறப்பு யாகங்கள் பூஜைகள் எல்லாம் நடந்து மகா கும்பாபிஷேகமும் நடந்து அந்த வீடியோ மிகவும் வைரலானது.

அதன் பிறகு விஜய் அந்த சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த புகைப்படமும் வெளியானது .விஜயை பொறுத்தவரைக்கும் அவர் சாய்பாபாவின் தீவிர பக்தர். மும்பை செல்லும் போதெல்லாம் அவர் சீர்டி சென்று வருவார் என பல பேர் சொல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அதன் பிறகு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னை கொரட்டூரில் சாயி மந்திர் என்ற ஒரு ஆலயத்தை கட்டி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று விஜயின் பிறந்தநாள் என்பதால் அவருடைய தாய் ஷோபா விஜய்க்காக அங்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. ஷோபாவை பொருத்தவரைக்கும் விஜய் ஒரே மகன் என்பதால் அவர் மீது அலாதி அன்பு கொண்டவர். ஒரு விழா மேடையில் கூட விஜய் இடம் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது சின்னதாக ஒரு ஹக் வேண்டும் என கேட்டு விஜய்யை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை பரிமாறிக் கொண்டார் ஷோபா.

சந்திரசேகரை விட விஜய்க்கு தாய் ஷோபா மீதுதான் அதிக அன்பு கொண்டவர். சிறுவயதிலிருந்து தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்திருக்கிறார். சந்திரசேகர் படத்தில் பிஸியாக இருந்ததனால் தந்தைக்கும் அப்பாவுக்கும் இடையே இருக்கும் அந்த பாண்டிங் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் தான் சோபா மீது அதிக அன்பு கொண்டவராக விஜய் இருந்திருக்கிறார்.

இன்று சினிமாவை அடுத்து அரசியலிலும் காலடி எடுத்து வைக்கும் விஜய் அவருடைய அரசியல் பயணமும் மென்மேலும் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அவருடைய இந்த பிறந்த நாளில் தாய் ஷோபா சாய்பாபா கோயில் வழிபாடு செய்து வருகிறார்.


author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top