தமிழ்த்திரை உலகில் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்தார் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாகவே நடித்துள்ளார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்திலும் அப்படித்தான் வருவார். அவர் படிப்படியாகத் தான் சினிமாவில் தன் திறமை காரணமாக முன்னுக்கு வந்தார்.
ஆரம்பத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு நாளைய இயக்குனர்களின் குறும்படங்களில் நடித்தார். அந்தப் பழக்கத்தை வைத்து அவர்கள் இயக்கிய பீட்ஷா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து மக்கள் செல்வன் ஆனார். அவர் நடித்த மகாராஜா படம் சீனாவிலும் கூட சக்கை போடு போட்டது. விஜய் டிவியில் கமலுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த ஏஸ் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
சினிமாவுக்கு வருமுன் அவர் துபாயில் வேலை செய்தார். அது என்ன வேலை அது கஷ்டமா, ஜாலியா என்பது குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் விஜய்சேதுபதி. என்னன்னு பாருங்க.
துபாய்ல இருக்கும்போது பார்ட் டைம் ஜாப் செஞ்சிருக்கேன். இன்னொரு வேலை செய்வதற்கு அங்கு அனுமதி கிடையாது. ஆனால் ஃப்ரீ விளம்பர பேப்பர் போடுவதற்கு மட்டும் விடுவாங்க.
எனக்கு சம்பளம் பத்தல என்பதற்காக இன்னொரு வேலை தேடிட்டு இருந்தேன். அப்போதான் பேப்பர் போடுற வேலை எனக்கு கிடைத்தது. நான் ஏற்கனவே 1000 திராம் வாங்கிட்டு இருந்தேன். பேப்பர் போடுவதற்கு 500 திராம் கொடுத்தாங்க. வியாழக்கிழமைகளில் விடியற்காலை பேப்பர் போடணும்.
துபாய் ஷேக் ரோட்ல 3000 பேப்பர் போட்டு இருக்கேன். இதெல்லாம் நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லல. இன்னும் 500 திராம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கிறோம்னு ஜாலியா தான் இருக்கும் என்கிறார் விஜய் சேதுபதி.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…