Connect with us

Cinema News

அடுத்தடுத்து ரெண்டு லட்டு!.. திருப்பதிக்கே கிளம்பிப்போன விக்ரம் பிரபு!.. சுட சுட அப்டேட் வேற!..

நடிகர் விக்ரம் பிரபு தான் நடித்த இரண்டு படங்களும் வெளியாக உள்ள நிலையில் அப்படங்கள் வெற்றிப்பெற திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். மேலும், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட்டையும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ப்ரியன் இயக்கத்தில் விகரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்தில் சுஷ்மிதா பாட், மீனாட்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் அப்படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில் இப்படம் 90’s கிட்ஸ்களுடன் ஒப்பிடும் படமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், இப்படத்தின் எடுடா பாட்டல் பாடல் ஒரு மில்லயனுக்கு மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து காதி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் விக்ரம் பிரபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக அமைந்துள்ளது. காதி வரும் ஜூலை 11, 2025 அன்று உலகளவிலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்று தன் மனைவியுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த விக்ரம் பிரபு பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தான் நடித்துள்ள காதி மற்றும் லவ் மேரேஜ் என இரண்டு படங்களும் தொடர்ந்து ரிலீஸாக உள்ளது எனவே படம் வெற்றி பெற சுவாமி தரிசனம் செய்தேன், ரொம்ப சந்தோசஷமாக இருக்கு, இதையடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் தமிழுடன் மீண்டும் இணைந்து அடுத்த படம் நடிக்கப்போவதாகவும், தெலுங்கிலும் இன்னொரு படம் நடிக்க உள்ளதாகவும் அப்டேட்களை கொடுத்துள்ளார் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில், நடைபெற்ற சினிமா விழாவில் கூறியிருந்தார். அஜித்தை வைத்து ஆதிக் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு வாய்ப்புக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top