Categories: Cinema News latest news

விஜய்கிட்ட பிடிச்ச விஷயம் இதுதான்… ஒண்ணு சொன்னாலும் ‘நச்’சுன்னு சொன்ன விக்ரம்பிரபு

ஷண்முகப்பிரியன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த லவ் மேரேஜ் படம் நேற்று வெளியானது. இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுவாக 90ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணு கிடைப்பது குதிரைக்கொம்பான விஷயமாக இருக்கும். அதனால் அவர்களது திருமணம் தள்ளி தள்ளிப் போகும். வயதும் 30ஐத்தாண்டி விடும்.

கல்யாணம் ஆகுமோ ஆகாதோ என்ற பயம்கூட வரும். அந்த வகையில் திருமணம் ஆனால் அவர்களது ஃபீலிங் எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படம் தான் லவ்; மேரேஜ். இது டிவி சீரியல் மாதிரி போவதாக பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார். இதையொட்டி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகர் விக்ரம்பிரபுவைப் பேட்டி காண்கிறார். அப்போது அவர் பகிர்ந்த தகவல்கள்தான் இவை.

ஒரு ஆர்டிஸ்டா எவ்வளவு பண்ண முடியும்கறது அவங்கவங்க அனுபவத்தைப் பொருத்தது. விஜய் சேதுபதி அப்படி நிறைய விஷயங்கள் பண்றாரு. யதார்த்தமா பண்றதும் கஷ்டம்தான். எனக்கு பிடிச்சது விஜய் சாரோட விஷயங்கள். அவர் யதார்த்தமாகவும் இருப்பாரு. அதே நேரம் கேரக்டராகவும் மாறிடுவாரு. அந்த யதார்த்தம் எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும்.

அவரு மட்டும்தான் மேக்சிமம் அவராகவே இருந்து பண்றாரு. மாதவன் வித்தியாசமான கேரக்டரா பண்ணுவாரு. ராக்கெட்ரில அவ்ளோ விஷயம் பண்ணுவாரு. மகாராஜாவுல விஜய்சேதுபதி நல்லா பண்ணுவாரு என்கிறார் விக்ரம் பிரபு.

அதே போல அவரது திரை உலக அனுபவங்கள் பற்றி இப்படி சொல்கிறார். நீங்க சொல்ற கதை என் மைன்ட்ல வேற மாதிரி ஓடும். அங்க தான் நிறைய தப்பு நடக்குது. அதனால முதல்ல உங்க மைன்ட்ல நீங்க சொல்ற கதை எப்படி இருக்கும்கறதை நான் புரிஞ்சிக்கணும். அதைத்தான் பட்டுப் பட்டுக் கத்துக்கிட்டு இருக்கேன். என்னைக்கு உங்க மேல நம்பிக்கை வச்சி வளருறீங்களோ அன்னைக்குத் தான் உங்களோட வளர்ச்சி இருக்குங்கறதைக் கத்துக்கிட்டேன் என்றும் சொல்கிறார் விக்ரம் பிரபு.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v