Connect with us

Cinema News

சமந்தா என்னமோ லக்கி பேர்தான்! நல்ல வேளை அந்தப் படத்துல நடிக்கல.. தப்பிய விஜய்

விக்ரம் நடித்த பல்பு வாங்கிய படம். முதலில் நடிக்க இருந்தது விஜய்தான் என எத்தனை பேருக்கு தெரியும்?

விஜய் நடிக்க இருந்த படத்தில் விக்ரம் நடித்து அந்தப் படம் ஃபிளாப் ஆன கதைதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த விஜய் அடுத்ததாக அவருடைய 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். அது சம்பந்தமான பணிகள் தான் இப்போது நடந்து கொண்டு வருகின்றன.

இதற்கிடையில் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் விஜய். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குதல் என முழு நேர அரசியல்வாதியாகவே மாறி வருகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலை முதன் முறையாக சந்திக்க இருக்கிறார்.

அதற்குள் கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் விஜய். இந்த நிலையில் அவர் நடிக்க இருந்த படத்தில் விக்ரம் நடித்த தகவல் பற்றி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 10 எண்றதுக்குள்ள திரைப்படம்.

இந்தப் படத்தில் விக்ரம், சமந்தா ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தில்தான் முதலில் விஜய் நடிக்க இருந்தாராம். இந்தப் படத்தை இயக்கியவர் விஜய் மில்டன்.

படத்தின் கதையை முதலில் விஜயிடம் தான் சொன்னாரா, விஜய் மில்டன். கதை மிகவும் பிடித்துப் போனதாம் விஜய்க்கு. உடனே விஜய் மில்டனிடம் விஜய் இரண்டு தயாரிப்பாளர்களை சொன்னாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் விஜயை வைத்து இந்தப் படத்தை இயக்க முடியாமல் போனதாக விஜய் மில்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

எப்போதுமே விஜயோட லக்கி பேர் சமந்தா என்று அனைவருக்கும் தெரியும். அவர்கள் இருவரும் இணைந்து தெறி, மெர்சல், கத்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்தப் படத்திலும் நடித்திருந்தால் விஜயின் கெரியரில் தோல்வி படமாக மாறியிருக்கும். மேலும் ரசிகர்களும் இந்த செய்தி அறிந்து தப்பிவிட்டார் தளபதி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top