ஆந்திராவுக்கு வாடா!.. என் கெத்த காட்டுறேன்!.. இயக்குனரிடம் மல்லுக்கட்டிய மகேஷ்பாபு!..

 
ஆந்திராவுக்கு வாடா!.. என் கெத்த காட்டுறேன்!.. இயக்குனரிடம் மல்லுக்கட்டிய மகேஷ்பாபு!..

Mahesh Babu: தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கப்படுபவர்தான் மகேஷ் பாபு. கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. தெலுங்கில் ஹிட் அடித்த மகேஷ் பாபுவின் படங்களை விஜய் தமிழில் நடிப்பதுண்டு.

விஜய் நடித்து கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்கள்தான். அதிலும், போக்கிரி படத்தில் மகேஷ்பாபுவின் அதே உடல் மொழியை விஜய் வெளிப்படுத்தியிருப்பார். இதனால் ட்ரோலிலும் சிக்கினார். பிரபு தேவா இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

ஆந்திராவுக்கு வாடா!.. என் கெத்த காட்டுறேன்!.. இயக்குனரிடம் மல்லுக்கட்டிய மகேஷ்பாபு!..

துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த மகேஷ்பாபு ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் மோடுக்கு மாறினார். முகத்தில் சரியாக முகபாவனைகளை காட்டி நடிக்க மாட்டார் என்பதால் ஆக்சன் காட்சிகளை வைத்து ஒப்பேற்றி வருகிறார். இவரின் அப்பா கிருஷ்ணா 70,80களில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தவர்.

எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு. அனுஷ்கா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா என அனைத்து முன்னணி நடிகைகளும் இவருடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் படத்தில் தமிழில் இவரே தனது சொந்த குரலில் பேசி நடித்திருந்தார்.


மகேஷ் பாபு பிறந்து வளர்ந்தது, பள்ளி, கல்லூரி என எல்லாமே சென்னையில்தான். சென்னை லயோலாவில் பி.காம் படித்தவர்தான் மகேஷ் பாபு. இவருடன் பள்ளியில் படித்தவர்தான் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் பட்டியல், அஜித்தை வைத்து பில்லா ஆகிய படங்களை இயக்கியவர்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘சென்னையில் பள்ளியில் படிக்கும்போது மகேஷ் பாபு என் பென்ச் மேட். எதாவது சண்டை வந்தா ‘ஆந்திராவுக்கு வா என் பவர காட்டுறேன்னு சொல்லுவான். டேய் போடா உன் பவர நான் ஏன் பாக்கணும்னு கேட்டுட்டு போய்விடுவேன்’ என சொல்லி இருக்கிறார்.

From Around the web