வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாகி அனைவரையும் திரும்பிப் பார்;க்க வைத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடித்த முண்டாசுப்பட்டி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர் பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இவர் தனது குடும்பம் ஆரம்பகாலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டது என்ற விவரத்தை பட விழா ஒன்றில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
என் அப்பாவும், பெரியப்பாவும் வறுமையான குடும்பத்தில் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டாங்க. அப்பா நல்லா படிப்பாங்க. பெரியப்பாவுக்கு சினிமான்னா ரொம்ப ஆர்வம். படிக்கக்கூட பணம் இருக்காது.
இருந்தாலும் படம் ரிலீஸ் ஆனா முதல் காட்சியைப் பார்த்து விட ஆர்வமாக இருப்பாங்க. ஒரு டிக்கெட் வாங்கி முதல் பாதி படத்தை அப்பாவும், 2வது பாதிப்படத்தை பெரியப்பாவும் பார்ப்பாங்க. இருவரும் பார்த்துட்டு வந்து மாற்றி மாற்றிக் கதையைச் சொல்லிக்குவாங்க.
பெரியப்பா தான் கூலி வேலை செய்து அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். அந்த கஷ்டத்தை உணர்ந்த நானும் என் தம்பி ருத்ராவை ஒரு நல்ல படத்துல அறிமுகப்படுத்தி இருக்கேன். நான் கிரிக்கெட் வீரராக வரணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு விபத்துல அது நடக்காம போயிடுச்சு. அதனாலதான் சினிமாவுக்கு வந்தேன். அதுக்கு பெரியப்பா தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஓ எந்தன் பேபி என்ற படத்தில் ருத்ரா அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தை நடிகர் கிருஷ்ணா இயக்குகிறார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…