Categories: Cinema News latest news

நல்ல வாழணும்னு ஆசையா… அப்படின்னா விவேக் சொல்ற சிம்பிளான வழியை ஃபாலோ பண்ணுங்க!

தமிழ்த்திரை உலகில் ‘சின்னக் கலைவாணர்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விவேக். இவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் இவரது சிந்தனைகள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது.

விவேக்கைப் பொருத்தவரையில் அவர் தமிழ்த்திரை உலகில் வெறும் காமெடியனாக மட்டும் பிரவேசிக்கவில்லை. கலைவாணர் என்எஸ்.கே. மாதிரி நகைச்சுவையுடன் சிந்தனைகளையும் வளர்த்து வந்தார். அவர் புகழ்பெற அதுதான் காரணம்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக: அதே போல முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வழிகாட்டுதல் படி லட்சக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டி இருக்கிறார். அதனால் அவரை அனைத்துத் தரப்பு ரசிகர்களின் நெஞ்சிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் கூட சாதி, மத, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பல கருத்துகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அருமையாக மக்கள் உணரும் வகையில் சொல்லி இருக்கிறார்.

சேவை: இவர் சினிமாவில் நடிப்பதைக் கூட வெறும் சம்பளத்துக்காக மட்டும் இல்லாமல் ஒரு சேவையாகவே செய்து இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் நல்லவங்களைத் தானே ஆண்டவன் சோதிக்கிறான் என்பதற்கு ஏற்ப இவர் வாழ வேண்டிய வயதில் இவ்வுலகை விட்டு போய்விட்டார் என்பது திரையுலகினருக்கே பேரதிர்ச்சியாகத் தான் இருந்தது.

இந்தியன் 2: அந்த வகையில் இவர் இறந்தபிறகும் கூட கடைசியாக நடித்த இந்தியன் 2 படத்தில் இவரது மீதமுள்ள காட்சிகளை ஏஐ டெக்னாலஜியில் எடுத்து வைத்து இருந்தனர். எல்லாம் இவரை நாம் மிஸ் பண்ணக்கூடாது என்ற அடிப்படையில் தான் ஷங்கர் சாரும், கமலும் செய்த பாராட்டுதலுக்குரிய விஷயம் என்றே சொல்லலாம்.

சந்தோஷமா வாழ: படம் தோல்வி என்பதையும் தாண்டி இந்தப் படத்தில் இத்தகைய செயலை அவர்கள் செய்து இருக்கிறார்கள் என்பது அந்த மாபெரும்; கலைஞனுக்கு செய்த பெருமைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்தவகையில் விவேக் நாம சிம்பிளா ஆனா சந்தோஷமா நல்லா வாழறதுக்கு என்ன செய்றதுன்னும் சொல்லி இருக்கிறார். வாங்க பார்க்கலாம்.

சிம்பிளான வழி: யார் வாழ்க்கையையும் கெடுக்கக்கூடாது. இதுதான் நல்வாழ்வுக்கான சிம்பிளான வழி. முடிஞ்சா அடுத்தவங்களுக்கு உதவி பண்ணிட்டுப் போங்க. நீ எது செய்றியோ அது உனக்கு இரண்டு மடங்கா திரும்பி வரும். நீ யாருக்காவது கெடுதல் செஞ்சா அந்த கர்மா உன்னோட தலை மேல ஒக்காந்துட்டு தகுந்த நேரம் பார்த்து நீ செஞ்ச கெடுதலை விட இரட்டிப்பா கொடுக்கும் என்கிறார் சின்னக் கலைவாணர் விவேக்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v