Categories: Cinema News latest news

தக் லைஃப் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே 30 கோடியா? யார் சொன்னது? அள்ளி விடுறதா?

மணிரத்னம், கமல், சிம்பு காம்போவில் நேற்று வெளியான தக் லைஃப் படத்துக்கு எதிர்பார்த்ததுக்கு ஏற்ப வரவேற்பு கிடைக்கவில்லை. புரொமோஷனுக்கே மலேசியா, துபாய்னு பல இடங்களுக்குப் போனார்கள். கடைசியில் பார்த்தால் இதென்ன இப்படி ஆகிடுச்சு என்று கேட்கிற அளவில் தான் இருந்தது. மணிரத்னம், கமல் என பெரிய லெஜண்ட்டுகள் இருந்தும் படத்துக்கு ஏன் இவ்ளோ பெரிய நெகடிவ் ரிவியூஸ் வருகின்றன என்றே தெரியவில்லை.

ஆனால் கமல் நடிப்பு, சிம்பு நடிப்பு பிரமாதம் என்கிறார்கள். எல்லாம் ஒரு ஹைப்பை ஏத்துறதுக்குத் தானா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இன்று பாசிடிவ் விமர்சனத்தை விட நெகடிவ் தான் அதிகளவில் வந்துள்ளது. அதே போல ஓபனிங் டே வசூலும் வெறும் 17 கோடி தான். இது கழுவி கழுவி ஊற்றப்பட்ட இந்தியன் 2, ரெட்ரோவை விட மிகக்குறைவு.

அப்படிப்பார்க்கும்போது ஷங்கர் தான் இந்தியன் 2 வை இயக்கினார். அவரையே கழுவி கழுவி ஊற்றினர். ஆனால் தக் லைஃப் நாயகன் படத்தை 38 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய மணிரத்னம் சார் தான் இயக்கினார். ஆனாலும் எங்கேயோ மிஸ் ஆகுது. சரி. வாங்க விஷயத்துக்கு வருவோம்.

தக் லைஃப் படத்துக்கான விளம்பரங்களுக்கு மட்டுமே 30 கோடிக்கும் அதிகமாக செலவழித்ததாக சொல்கிறார்களே… இதுவும் படத்தின் பட்ஜெட்டுக்குள்தான் அடங்குமா? புரொமோஷனுக்கு மட்டுமே இவ்ளோ பெரிய தொகையை செலவழிக்கிறது சரியான முடிவா? ஒரு தயாரிப்பாளரா உங்க கருத்து என்னன்னு ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

ஒரு படத்தினுடைய பட்ஜெட்ல அந்தப் படத்துக்கான விளம்பர செலவும் நிச்சயமா அடங்கும். தக் லைஃப் படத்தைப் பொருத்தவரைக்கும் 30 கோடி ரூபாய் அந்தப் படத்தோட விளம்பரத்துக்காக செலவழிச்சிருப்பாங்களா என்பதுல எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கு. அதிகபட்சமாக 5 அல்லது 6 கோடி ரூபாய் வரை அவர்கள் செலவழித்து இருக்க வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v