மர்மர் படம் கடந்த 3 நாள்களாக சமூக வலைதளங்கள்ல பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. யூடியூப் விமர்சகர், இன்ப்ளூயன்ஸர்ஸ்லாம் நல்லாருக்குன்னு சொல்றாங்க. இதுபற்றி ஆஸ்கர் மூவீஸ் நிறுவனர் தயாரிப்பாளர் பாலாஜிபிரபு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
Found Footage Horror:அந்தப் பட நிறுவனம் அந்தப் படத்தை புரொமோட் பண்றாங்க. அதுக்காக சோஷியல் மீடியாவைக் கையில் எடுத்துருக்காங்க. இந்தப் படத்தை ஃபவுண்டு ஃபுட்டேஜ் ஹாரர்னு (Found Footage Horror)சொல்றாங்க. அதாவது ஏற்கனவே ரியல் ஸ்டோரில எங்காவது ஷூட் பண்ணும்போது அந்த ஃபுட்டேஜ்க்குள்ள பேய் இருக்குற மாதிரியோ, உருவம் தெரியற மாதிரியோ இருந்துச்சுன்னா அதுக்கு பேரு ஃபவுண்டு ஃபுட்டேஜ் ஹாரர்.
பேய் மாதிரி உருவம்: எதை வந்து ஃபவுண்டு ஃபுட்டேஜ் ஹாரர்னு சொல்லலாம்னா உண்மைச் சம்பவத்தை ஷூட் பண்ணும்போது கிளாரிட்டி இல்லாம பேய் மாதிரி உருவம் இருந்தா அதை அப்படி சொல்லலாம். ஆனா இந்தப் படத்துல உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுத்துருக்காங்களான்னா அது கிடையாது.
கிரியேட் பண்றாங்க: அதை அந்தப் படத்துக்குள்ள அப்படி ஒண்ணைக் கிரியேட் பண்றாங்க. ஒரு ஃபுட்டேஜைப் பார்க்குறாங்க. அதுக்குள்ள ஒரு உருவம் தெரியுது. அது ஜவ்வாது மலை மாதிரியான நாலு யூடியூபர்ஸ், ஒரு பொண்ணு போறாங்க. இது காட்டுப்பகுதியில் போறாங்க. பல காட்சிகள் இயற்கையில் போராடி எடுத்துருப்பதாக சொல்றாங்க.
இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்ஸ்சர்ஸ்: ஆனா அந்த எஃபோர்ட்ஸ் படத்துல தெரியல. ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு காட்டுக்குள்ள போகும்போது எவ்வளவு திகிலா தெரியலாம். ஆனால் அப்படி எதுவுமே சொல்லல. இந்த மாதிரி ஹாரர் படங்கள் எடுத்தா அதுல அட்ராக்ஷன் ஜாஸ்தியா இருக்கு. இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்ஸ்சர்ஸ் இந்தப் படத்தை ரொம்ப பெரிசா பேசுறாங்க.
ஓவர் ஹைப்: அப்படி ஒரு விஷயம் இருக்கான்னா அது இல்லை. இதுதான் உண்மை தகவல். என்ன தான் ஹைப் பண்ணிப் பேசினாலும் ஆடியன்ஸ் விரும்புனாதான் படம் ஓடும். ஒரு படம் நல்லாருந்தா அந்தப் படமே புரொமோஷனைத் தேடிக்கிடும். அமரன், விக்ரம்2, டிராகன் படங்கள் எல்லாம் ரசிகர்களுக்குப் பிடிச்சதால கொண்டாட ஆரம்பிச்சாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…
Karur: தற்போது…