Categories: Cinema News latest news

அனிமல் டைரக்டர் மேல காண்டு… இதுல வேற தீபிகா படுகோனேவை தமன்னாவும் வம்புக்கு இழுக்கிறாரா?

நம்ம ஊருல தான் நடிகைகளுக்குள் போட்டோ போட்டின்னா பாலிவுட்லயுமா? அதுவும் தமன்னா அங்கே போய் என்ன வம்பு பண்ணினார் என்பதுதான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.

அனிமல் டைரக்டர் சந்தீப் ரெட்டி வங்கா ஸ்பிரிட்னு ஒரு படம் எடுக்குறாரு. அந்தப் படத்துல ஹீரோயின்தான் தீபிகா படுகோனே. அவங்க படத்துல இருந்து வெளியே வந்துட்டாங்க. என்ன காரணம்னு கேட்டதுக்கு சம்பளப்பிரச்சனைன்னு சொன்னாங்க. ஆனா நாம கேள்விப்பட்டது என்னன்னா அனிமல் படத்துலயே ராஷ்மிகா மந்தனாவை எல்லாம் என்னா அமர்க்களம் பண்ணிருந்தாரு.

‘கொஞ்சம் குறைச்சிக்கோங்க’ன்னு தீபிகா கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்லிருப்பாரு போல. அது பயங்கர வல்கரான காட்சிகள். ஆனா அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது. ‘நீ டைரக்டரா, நான் டைரக்டரா’ன்னு கேட்டுருக்காரு. உடனே வெளியே வந்துட்டாங்க. அதனால சம்பளப்பிரச்சனைன்னு சொல்லிட்டாங்க.

அதே நேரம் அனிமல் டைரக்டர் என்ன பண்ணிருக்காருன்னா தீபிகா படுகோனேகிட்ட நான் சொன்ன கதையை எல்லாம் வெளியே சொல்லிட்டாங்க. இது எந்த விதத்துல நியாயம்னு கேட்டு அது சம்பந்தமான ரீல்ஸ் இன்ஸ்டாவுல வந்துருக்கு. அதைப் போய் தமன்னா லைக் பண்ணிருக்காங்க.

எப்படி தமன்னா லைக் பண்ணலாம்னு கேட்டு வறுத்து எடுத்துருக்காங்க. உடனே தமன்னா நான் லைக் பண்ணலைங்க. இன்ஸ்டாவுல ஏதோ டெக்னிக்கல் பிராப்ளம். என்னது மட்டும் ஏன் லைக் பண்ணுச்சுன்னு கேட்டுள்ளார். இது நம்மூருல மட்டுமல்ல. பாலிவுட்லயும் நடிகைகளுக்கு இடையே போட்டி பெருமளவில் இருக்கு.

தமன்னாவுக்கு ‘காவாலா’ சாங்குக்குப் பிறகு பெரிய அளவில் பேரு இல்லை. மைசூர் சாண்டல் விளம்பரம் கூட பெரிய அளவில் போகல. தன்னைப்பற்றி ஏதாவது பேசணும் அப்படிங்கறதுக்காக இவங்களா கூட லைக் பண்ணிருப்பாங்கன்னும் சொல்றாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v