Categories: Cinema News latest news

மணிரத்னம் படத்தில் அஜீத் நடிக்காததுக்கு இதுதான் காரணமா? அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

இயக்குனர் மணிரத்னம், நடிகர் அஜீத்குமார் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் படம் பண்ணலன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில்தான் இது.

மணிரத்னம் படத்தில் அஜீத்குமார் இதுவரை நடிக்கலைன்னா அதுக்கு முக்கியமான காரணம் நேருக்கு நேர் படத்தில் இருந்து ஒரு கால கட்டத்தில் அஜீத் வெளிநடப்பு செய்ததுதான். அந்தப் படத்தில் இருந்து அவர் வெளியேறியதற்குப் பின்னால அவர் அந்தப் படத்தில் நடிக்கப் போகிறாரா இல்லையா, படப்படிப்புக்கு வரப்போகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதற்காக அவரைத் தொடர்பு கொள்ள மணிரத்னம் பல முறை முயற்சி செய்தார்.

மணிரத்னத்தோட போனையே அஜீத் எடுக்கல. அதன்காரணமாகத்தான் அதன்பிறகு தன்னுடைய படங்களில் நடிக்க அஜீத்தை அழைக்கவே இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் அஜீத்துக்குப் பதிலாக சூர்யா நடித்துள்ளார் என்று தெரிகிறது. சூர்யா இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் நடிக்க மிகவும் கூச்சப்பட்டாராம். வசந்த் இயக்கிய இந்தப் படத்தைத் தயாரித்தவர் மணிரத்னம்.

விஜய், சூர்யா, கௌசல்யா, சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் தெவிட்டாத பாடல்கள் உள்ளன. எங்கெங்கே, அவள் வருவாளா, அகிலா அகிலா, துடிக்கிற காதல், மனம் விரும்புதே ஆகிய பாடல்களை இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கும்.

அதேநேரம் நேருக்குநேர் படத்தில் அஜீத் ஏன் நடிக்கவில்லை என்றால் படத்தின் கேரக்டர் தனக்கு ஒத்துவரவில்லை என்றும் விஜயின் கேரக்டரில் தான் நடிக்கிறேன் என்றும் அஜீத் சொல்லி இருந்ததாகக் கூறப்பட்டது. அதனால்தான் அவர் படத்தில் இருந்து வெளியேறினார் என்றும் ஒரு தகவல் உண்டு.

இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் அஜீத் நடித்தால் இன்னும் பல வித்தியாசமான லுக்கில் அஜீத்தின் நடிப்பை நாம் பார்த்திருக்கலாம். படமும் வேற லெவல் ஹிட் அடித்து இருக்கும். இனி வரும் காலங்களிலாவது இருவரும் இணைவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v