Connect with us

Cinema News

சார்பட்டா பரம்பரைக்கு வந்த தலைவலி தங்கலானுக்கு வரலயாம்… அப்படின்னா ஏன் பிளாப்?

தமிழ்த்திரை உலகில் சில சமயம் நல்ல எதிர்பார்த்து இருக்குற படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்காது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத படம் பட்டையைக் கிளப்பும். அப்படித்தான் இந்த இரு படங்களும். அவற்றில் ஒன்று சார்பட்டா பரம்பரை. மற்றொன்று தங்கலான். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.

2021ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இது ஒரு அதிரடி விளையாட்டு திரைப்படம். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஆர்யா, ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் பெரும் பொருட்செலவில் கஷ்டப்பட்டு எடுத்த படம் தங்கலான். இந்தப் படம் 2024ல் வெளியானது. பா.ரஞ்சித் தான் இயக்கி இருந்தார். விக்ரம் தான் ஹீரோ. முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் உடலை வருத்தி நடித்திருந்தார்.

பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து இருந்தார். ஆனால் படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதே புரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

pa.ranjith

pa.ranjith

சார்பட்டா படம் ரிலீஸ் ஆனதற்குப் பிறகு இதுவரை நான் பார்க்கவே இல்லை. என்ன வருத்தம் என்றால் அது தியேட்டர்ல வந்துருக்கணும். வீட்ல எல்லாரும் உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா எனக்கு கொஞ்ச நேரம் பார்த்தே தலைவலி வந்துட்டு. அப்புறம் படம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க.

அந்த நிமிஷமே அந்தப் படத்தில் இருந்து வெளியே வந்துட்டேன். ஆனா இன்னைக்கு வரை நான் தங்கலான் படத்தில் இருந்து வெளியே வரல. அந்த உலகத்திலேயே நான் இருந்து, என்ன நடந்துட்டு இருக்கு, ஏன் இந்தப் படம் கனெக்ட் ஆகலன்னு தேடிக்கிட்டே இருக்கேன் என்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top