Connect with us

Cinema News

ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன்… போலீஸ் கெட்டப்ல பட்டையைக் கிளப்புற நடிகர் யார்?

ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன் இவர்களில் அதிகமாக போலீஸ் வேடத்தில் நடித்தவர் யாருன்னு பார்க்கலாமா…

போலீஸ்னா இப்படித்தான் இருக்கணும். இவங்க படத்தைப் பார்க்கும்போது நாமும் போலீஸ் ஆகணும்கற எண்ணம் வரும். அந்த வகையில் யாரு போலீஸா நடிச்சா நமக்கு அந்த எண்ணம் வரும்னு பார்க்கலாமா…

அர்ஜூன் 80களில் இருந்து காவல் அதிகாரியா பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார். ஏழுமலை, மருதமலைன்னு பல படங்களில் ஹிட் கொடுத்துள்ளார்.

நாலாவது இடத்துல இருப்பவர் ரஜினிகாந்த். மூன்று முகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டரில் வந்து வேற லெவலில் மிரட்டி இருந்தார். அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, நாட்டுக்கு ஒரு நல்லவன், பாண்டியன், தர்பார் ஆகிய படங்களில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஜெய்லர், வேட்டையன் படங்களில் சமீபத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவற்றில் ஜெய்லர், மூன்றுமுகம், வேட்டையன் தான் பெஸ்ட்.

கமல் சட்டம், ஒரு கைதியின் டைரி, சூரசம்ஹாரம், வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல், வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காக்கிச்சட்டை படத்தில் போலீஸ் ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

அர்ஜூன் 2வது இடத்தில் இருக்கிறார். சங்கர் குரு, தங்கைக்கு ஒரு தாலாட்டு, ஜெய்ஹிந்த், செங்கோட்டை, அடிமைச்சங்கிலி, தாயின் மணிக்கொடி, சுயம்வரம், சேவகன், ஒற்றன், ஆணை, மருதமலை, பொம்மலாட்டம், வந்தே மாதரம், மாசி, மங்காத்தா, வன யுத்தம், ஒரு மெல்லிய கோடு, நிபுணன், கொலைகாரன் என பல படங்களில் காவல் அதிகாரியாகவே நடித்துள்ளார். இவருக்கு பெரும்பாலும் ஹிட்.

விஜயகாந்த் காவல் அதிகாரியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான். சிவந்த கண்கள், சாட்சி, ஜனவரி 1, புதிய தீர்ப்பு, எனக்கு நானே நீதிபதி, காலையும் நீயே மாலையும் நீயே, ஊமை விழிகள், சிறைப்பறவை, தர்மம் வெல்லும், ராஜநடை, புலன் விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், தாய் மொழி, ராஜதுரை, சேதுபதி ஐபிஎஸ், ஆனஸ்ட்ராஜ், அலெக்ஸாண்டர், வீரம் வெளஞ்ச மண்ணு, வல்லரசு, வாஞ்சிநாதன், தேவன், பேரரசு, அரசாங்கம், விருதகிரி, சகாப்தம் ஆகிய படங்களில் காவல் அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top