இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே தன்னுடைய திறமை என்ன என்பதை இந்த சினிமாவிற்கு காட்டியவர். அந்த படத்திற்கு பிறகு விஜயை வைத்து தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் அட்லீ.
விஜயை வைத்து படம் பண்ணுவதற்கு தகுதியான ஒரே இயக்குனர் என்றால் அது அட்லீ தான் என்ற அளவுக்கு விஜய்க்கும் அட்லிக்கும் இடையே ஒரு நெருக்கமான பாண்டிங் உருவானது. அதற்கு ஏற்ப அவர்கள் இணைந்தாலே ஹிட் என்ற அளவுக்கு இண்டஸ்ட்ரியில் ஒரு பேச்சும் வந்தது.
ஏன் பீஸ்ட் பட விமர்சனத்திற்கு கூட விஜய்க்கு அட்லீ தான் கரெக்ட் என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நான்கு படங்களை மட்டுமே இயக்கிய அட்லீ ஐந்தாவது படமாக பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.
அந்தப் படம் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது. அதிலிருந்து ஒட்டுமொத்த பாலிவுட்டுமே அட்லீயை தலையில் வைத்து கொண்டாடியது. ஷாருக்கான் அமீர்கான் என அனைத்து பாலிவுட் நடிகர்களும் அடலீயை நெருங்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் தெலுங்கில் ராம்சரனும் அட்லீயுடன் இணைய ஆசைப்பட்டார்.
இப்படி தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் பக்கம் சென்று ஆயிரம் கோடி வசூலை அள்ளும் விதமாக ஒரு படத்தை கொடுத்த அட்லீயை இன்னும் தமிழ் சினிமா கொண்டாடவே இல்லை. இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது. தெலுங்கில் ராஜமவுலி பல இயக்குனர்களை கொண்டாடி வருகிறார்.
எந்த ஒரு தெலுங்கு படம் ரிலீஸ் ஆனாலும் அங்கு ராஜமவுலி கண்டிப்பாக நிற்கிறார். எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு சப்போர்ட் சிஸ்டமாக ராஜமவுலி திகழ்ந்து வருகிறார். இது ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் நடக்கவில்லை. எல்லா இயக்குனர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டுங்கள்.
இன்று வரை அடலீயை நாம் ஒன்று சேர்ந்து பாராட்டவே இல்லையே. நான் சில இயக்குனர்களிடம் கூறினேன். அட்லீயை கூப்பிடுங்கள். ஒரு பார்ட்டி வைத்து அவரை செலிபிரேட் பண்ணுங்கள். என்றெல்லாம் கூறி இருக்கிறேன். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை. இப்படி செய்தால் தான் தமிழ் சினிமாவும் ஒரு ஆரோக்கியமாக செயல்படும் என ஞானவேல் ராஜா கூறினார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ சென்னை பக்கம் வந்ததாகவே தெரியவில்லை. இப்போது கூட அம்பானி வீடு திருமண விழாவில் தன் காதல் மனைவியுடன் குதூகலத்துடன் கும்மாளம் போட்டு வருகிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…