தலைப்பைப் பார்த்ததும் அதென்னடா புது ஃபார்முலாவா இருக்கேன்னு குழப்பமா இருக்கா? அது என்ன? யார் சொன்னதுன்னு தொடர்ந்து படிங்க. தெரிஞ்சிக்கலாம்.
விஜய் சேதுபதி பூரி ஜெகந்நாத் உடன் இணைந்து பான் இண்டியா மூவியில் நடிக்கிறார். அவரைப் பொருத்தவரைக்கும் ஏற்கனவே பான் இண்டியா ஸ்டாரா மாறிட்டாரு. மாஸ்டர் படத்துல வில்லனா நடிச்சாரு. நான் எப்பவுமே ஹீரோவாத்தான் நடிப்பேன். வில்லனா நடிக்க மாட்டேன்.
கேரக்டர் ரோல் பண்ண மாட்டேன்னு அவர் முடிவு எடுத்திருந்தாருன்னா தமிழ்ல நாலு படம் ஓடாம போனா அவரு காணாமப் போயிருப்பாரு. ஆனா நான் வில்லனா மாறுவேன்னு மாஸ்டர்ல வந்தது அவருக்கு ஒரு பெரிய பேரை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அப்புறம் தெலுங்கு, இந்தின்னு எல்லாப் படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சாரு.
ஏற்கனவே அவர் பான் இண்டியா ஸ்டாரா மாறிட்டாரு. புதுசா மாறத் தேவையில்லை. இப்போ மகாராஜாங்கற வெற்றிப் படத்தைக் கொடுத்துட்டாரு. எப்பவுமே ஒரு ஹீரோ ஒரு பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்துட்டாருன்னா அப்புறம் அவரு நாலு ப்ளாப்புக்குத் தாங்குவாரு. இதுதான் இங்கே இருக்குற ஃபார்முலா. அப்போ மகாராஜாவுக்குப் பிறகு ஏஸ் வந்தது. அந்தப் படம் ஓடலை. இன்னும் ஒரு 3 படம் அவரு கணக்குல இருக்கு… ஃபெய்லியர் கொடுக்கறதுக்கு என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடிக்க உள்ளார். பூரி ஜெகந்நாத் ஏற்கனவே போக்கிரி, பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். விஜய்சேதுபதி பூரி ஜெகந்நாத்திடம் கதை கேட்டுள்ளாராம்.
விரைவில் இவர்களது காம்போவில் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவர உள்ளன. படத்திற்கு பெயர் பெக்கர் என்று வதந்திகளைக் கிளப்பி வருகின்றனர். படத்தில் தபு மற்றும் கன்னட நடிகர் விஜய் குமார் உள்பட பலர் நடிப்பார்கள் என தெரிகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…