Categories: Cinema News latest news

ஏதோ எடுக்கணும்னு எடுத்து வச்சிருக்காங்க..- பத்துதல படத்தால் ஆதங்கப்பட்ட பத்திரிக்கையாளர்!.

தற்சமயம் திரையரங்குகளில் ஒரே சமயத்தில் வெளியாகி போட்டி போட்டு வரும் திரைப்படங்களாக விடுதலை மற்றும் பத்துதல ஆகிய இரண்டு திரைப்படங்கள் இருந்து வருகின்றன. பத்து தல திரைப்படத்தில் சிம்புவும் , கெளதம் கார்த்தியும் நடிக்கிறார்கள் என்பது கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Pathu Thala

ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் அதை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் நடிகர்கள் என பார்க்கும்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த சூரியின் படமும் சிம்புவின் படமும் மோதிக்கொள்கிறது என கூறப்பட்டாலும் கதை என பார்க்கும்போது வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் இதுக்குறித்து கூறும்போது விடுதலை படத்தையும் பத்துதல படத்தையும் முதலில் நாம் ஒப்பிட்டே பார்க்க முடியாது என்கிறார்.

அந்தணன் பார்வையில் பத்து தல படம்:

ஒரே சமயத்தில் இரு படங்களும் வெளியாகி இருந்தாலும் பத்து தல திரைப்படம் ஒரு வழக்கமான கேங்ஸ்டர் கதைதான். பொதுவாகவே சினிமாவில் நிறைய கேங்ஸ்டர் கதைகள் வருகின்றன. எனவே ஒரு புது கேங்ஸ்டர் திரைப்படம் எடுக்கிறோம் எனில் இதுவரை கேங்ஸ்டர் படங்களில் இல்லாத விஷயத்தை வைத்து அதை எடுக்க வேண்டும்.

ஆனால் பத்து தல திரைப்படம் வழக்கமான கேங்ஸ்டர் படம் போலவே உள்ளது. சும்மா எடுக்கணும்னு எடுத்து வச்சிருக்காங்க என கூறினார். மேலும் விடுதலை குறித்து கூறும்போது விடுதலை தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படம் கண்டிப்பான அனைவரும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் அந்தணன்.

Published by
Rajkumar