×

சினிமாவுல அட்ஜெஸ்ட்மெண்ட் ஒத்துப்பீங்களா? - பேட்டியிலிருந்து வெளியேறிய பிரபல நடிகை 

சினிமாவில் காலம் காலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வாய்ப்பு இருப்பதாக புகார் இருக்கிறது. மீ டூ வில் திரைத்துறையில் உள்ள பல பெண்களும் இதை தெரிவித்துள்ளனர்.
 

இந்நிலையில், சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து,  சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் சினிமாவில் கால் பதித்துள்ளவர் நடிகை வானி போஜன். 

இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கையின் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் உள்ளது. நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்கிற ரீதியில் தொகுப்பாளர் கேள்வி கேட்டார். நான் அதை எப்போதும் செய்ய மாட்டேன் என வாணி போஜன் கூறியும் தொகுப்பாளர் விடவில்லை. திரும்ப திரும்ப அந்த கேள்வியையே கேட்டதால் ஒரு கட்டத்தில் கடுப்பான அவர் நான் பேட்டிகொடுக்கவில்லை எனக்கூறி வெளியேறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News