×

அரசியல் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா கலைஞர்!

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

 

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் சினிமாக்காரராக இருந்தவரை கலைஞர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்துவந்தார். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளாகதான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சீர்குலைத்துவிட்டதாக விமர்சனத்தை முன்வைத்தார். மேலும் திமுகவுடன் எந்நாளும் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்தார். இதனால் திமுகவினரும் அவரை விமர்சனம் செய்துவந்தனர்.

இந்நிலையில் இன்று கலைஞரின் 97 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் ‘பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.’ என பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News