×

சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்....

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு முதல்வர் பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
 

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்செந்தூரில் மகளிரணிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.  அதற்கு முன்பாக தினத்தந்தி குழுமத்தின் அதிபர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் முன் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டு வந்த புகார் பெட்டி போன்ற விஷயங்களை ஸ்டாலின் பிரச்சாரம் என்கிற பெயரில் செய்து வருகிறார், அனால் நாங்கள் நவீனமாக சிந்தித்து `1100’ என்கிற புகார் எண்னை மக்களுக்குக் கொடுத்துள்ளோம். வீட்டில் இருந்தபடியே மக்கள் இந்த எண்ணுக்கு அழைத்து, தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம், உடனே தீர்வு வழங்கப்படும்.

ஏற்கனவே நான் செப்டம்பர் மாதம் 1100 குறை தீர்ப்பு எண் பற்றிய அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு ஸ்டாலின் இந்த புகார் பெட்டி என்கிற நாடகத்தை நடத்தி வருகிறார். அப்போது அறிவித்த திட்டத்தை சென்ற வாரம் தொடங்கியும் விட்டோம். இப்போது தி.மு.க-வுக்கு மனு வாங்கும் வேலைகூட இல்லை’’ என்று பேசினார்.

முன்னதாக மகளிரணிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இந்தியாவிலேயே மகளிருக்கு என தனி அமைப்பை ஏற்படுத்திய கட்சி அ.தி.மு.கதான். தேர்தல் நேரத்திலே சிறப்பான பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பூத்திலும் மகளிர் அமைப்பை ஏற்படுத்தி இந்த கழகத்திற்கு வலு சேர்க்கிற பணியை இந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை தேர்தல் நேரத்திலே பூத் வாரியாக மகளிர் குழு அமைக்கப்பட்டது கிடையாது. முதன்முறையாக இந்த தேர்தலில் மகளிருடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க கட்சி மகளிருக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களும் இந்தத் தேர்தல் பணியிலே ஈடுபடுகின்ற சூழலை நாங்கள் உருவாக்கி தந்திருக்கிறோம்’’ என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News