×

பஞ்சாப் விவசாயிகளுக்காக ஏன் போராடுகிறீர்கள் ஸ்டாலின்? - வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி

வேளாண் சட்டங்களைப் பற்றி தெரியாத ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார். 
 
 
பஞ்சாப் விவசாயிகளுக்காக ஏன் போராடுகிறீர்கள் ஸ்டாலின்? - வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்றைய பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``ஸ்டாலின் அவர்களே விவசாயியுடைய வரலாறு உங்களுக்கு எதுவும் தெரியாது. விவசாயிகளின் வரலாறு தெரிந்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். வேளாண் சட்டத்துக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம்னு சொல்றாரு. வேளாண் சட்டங்களைப் பற்றி தெரியாத ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது, திமுக தலைவர் ஸ்டாலின்தான். ஸ்டாலின் அவர்களுக்கு, வேளாண் சட்டம் பற்றி எதுவும் தெரியாது.

தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கிற முதல் அரசு அது அம்மாவின் அரசு தான். நம்முடைய மாநிலத்தில் இருக்கிற விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை. நீங்க ஏன் பஞ்சாப் விவசாயிகளுக்காகப் போராடுகிறீர்கள்?. பஞ்சாப் விவசாயியும் நாமளும் ஒண்ணா?... பஞ்சாபில் நிறைய இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இடைத்தரகர்கள் என்றால் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அவர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கி வர்த்தர்களிடம் விற்பவர்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படும்.  

அதனால் அங்கு போராடுகிறார்கள். பஞ்சாப் விவசாயிகளுக்காக தான் ஸ்டாலின் போராடுகிறார். நம்ம விவசாயி விளைவித்த பயிர்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். இது தான் நம்முடைய நோக்கம். எப்படியாவது விவசாயிகளை குழப்ப வேண்டும். அப்படியே அவங்க ஓட்டை வாங்க வேண்டும். ஆட்சிக்கு வரணும் என்ற கெட்ட எண்ணத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News