×

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் நடவடிக்கை!

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை.

 

தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அதிமுக ஆட்சியில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த கொரானா பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இலவசமாகவே அரசு செலவில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து யாதும் ஊரே எனும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க புதிய திட்டத்தை கொண்டுவந்தார். இவ்வாறு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் மற்றும் நல திட்டங்கள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்தவகையில் தற்போது பருவமழை தொடங்கி இருப்பதால் மேலும், பல நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News