×

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்… தொண்டர்களுக்கு முதல்வர் நன்றி அறிக்கை!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிச்சாமி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிச்சாமி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வரின் நன்றி அறிக்கை:-

உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிய சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.வெறும் எழுத்துகளால் மட்டும் நான் உரைக்கும் நறி நின்று விடாது. 2021ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன் பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம்.

மேலும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அத்திக்கடவு அவிநாசி திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அதிமுக அரசின் சாதனைகள் குறித்து பெருமைப்படுகிறேன் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு ஓட்டு கேட்கும் வாய்ப்பை விவசாயி வழிநடத்தும் அரசு உங்களுக்கு வழங்கியுள்ளது என்று மெத்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்  தாய்வழி தந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதேஎனும் எம்ஜிஆரின் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுபடுவோம்.

From around the web

Trending Videos

Tamilnadu News