நிறைய படம் பண்ணுங்க!.. நான் இருக்கேன்.. பாத்துக்கலாம்!.. சிம்புவுக்கு எனர்ஜி ஏத்திய முதல்வர் விஜய்...

 
simbu vijay

நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். திரையுலகில் இருந்து ஒரு முதலமைச்சர் வந்திருப்பதால் திரையுலகை சேர்ந்த பலரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களின் பலரும் நேரில் சென்று விஜய்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகை சினேகா, சிம்ரன், சிபிராஜ், கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று விஜய்க்கு வாழ்த்து சொன்னார்கள். அதேபோல் சமீபத்தில் நடிகர் சிம்புவும் முதலமைச்சர் விஜயை நீலாங்கரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அப்போது சிம்புவுடன் பேசிக் கொண்டிருந்த விஜய் ‘உங்கள் லுக் அழகாக இருக்கிறது. உடம்பை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்கள்.. நிறைய படங்களில் நடியுங்கள்.. உங்கள் படம் தொடர்பாக என்ன பிரச்சனை என்றாலும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறாராம்..

இது சிம்புவுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் சிம்பு படம் வெளியாகும் போது கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்தில் முடியும். கடைசி நேரத்தில் சிம்பு பணம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு தயாரிப்பாளர் அந்த படத்திற்கு தடை வாங்குவார். அல்லது ரிலீஸ் செய்யவிடாமல் தடுப்பார். அதன்பின் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுதான் அந்த படம் வெளியாகும்.

தற்போது முதலமைச்சர் விஜயே இப்படி சொல்லிவிட்டதால் திரையுலகில் தனக்கு ரெட் கார்டு விதிப்பது, தனது படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுப்பது போன்ற நிகழ்வுகள் நடக்காது’ என சிம்பு நம்புகிறாராம்.

Tags

From Around the web