யப்பா கொலமாஸ்!.. அனிருத் திருமண ரிசப்ஷனில் நடந்த அதிசயம்!.. ரஜினி - விஜய் செம போஸ்!

 
vijay

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் கலந்துக்கொண்டுள்ளார். நீல நிற பந்த்கலா சூட் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்யின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அனிருத்தின் திருமணத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.

vijay

இந்த நிகழ்ச்சியில் விஜய், நடிகை திரிஷாவுடன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் எழுந்திருந்த நிலையில் விஜய் நிகழ்ச்சிக்கு தனியாகவே வந்திருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விஜய் சந்தித்துப் பேசிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

CR  Desk
CR Desk

7938 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web