வாய் திறக்காத ரஜினி - நன்றி கூறிய முதல்வர்… தளபதி வேற ரகம்!
விஜய்யின் நற்பண்பு:
தாவெக கட்சியின் தலைவர் தளபதி விஜய் இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த 10- ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்ற முதல் நாளில் இருந்தே மக்களை வெகுவாக கவர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் பிரசபரமான ஒரு அரசியல் உறவை வைத்துக் கொள்கிறார் விஜய்.
இது அரசியல் வரலாற்றில் புதிய நற்பண்பை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இப்படியான சமயத்தில் நடிகர் ரஜினிகாந்திடம், பத்திரிகையாளர் ஒருவர் விமான நிலையத்தில் விஜய் முதல்வராக பதவியேற்று இருக்கிறார் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பதற்கு….
பதில் அளிக்காத ரஜினி:
பதில் எதுவுமே சொல்லாமல் புன்னகைத்த முகத்தோடு வணக்கம் வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு விறுவிறுப்பாக நடந்து சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். விஜய் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்காமல் சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இப்படியான சமயத்தில் முதல்வர் தளபதி விஜய் அவர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். ஆம் முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்…. தாவெக தலைவர் விஜய் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
விஜய் நன்றி:
அந்த வாழ்த்துக்கு தற்போது விஜய் உங்களது அன்பான வாழ்த்துக்கு நன்றி என பதில் அளித்து இருக்கிறார். தான் முதல்வர் ஆனது குறித்து பதிலளிக்காமல் சென்ற ரஜினிகாந்த்திற்கு விஜய் நன்றி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அவருடைய நற்பண்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இதுவும் அரசியல் நுணுக்கம் தானே…..விஜய்யின் புது ஸ்டைல் அனைவரையும் மகிழச்செய்துள்ளது.
