Categories: Cinema News latest news

ஸ்டார் நடிகர் போல் கீர்த்தியை சுற்றிவளைத்த ரசிகர்கள் – தெலுங்கானாவில் பரபரப்பு!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் உச்ச நடிகர்களுக்கு இணையாக மிகக்குறுகிய காலத்தில் உயர்ந்துவிட்டார். தெலுங்கில் அவர் நடித்த மகாநடி திரைப்படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமானார்.

keerthi suresh

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து ரெமோ, பைரவா, ரஜினி முருகன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கானாவில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சென்ற கீர்த்தியை அங்கிருந்த ரசிகர்கள் பார்த்து பரவசமடைந்தனர்.

keerthi suresh

பின்னர் சில நொடிகளிலேயே அங்கு மளமளவென ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. கீர்த்தியோ மாஸ்க் போடாமலே சோஷியல் டிஸ்டன்ஸை கடைபிடிக்காமல் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Keerthy Suresh

பிரஜன்
Published by
பிரஜன்