×

இதைக்கூடவா காப்பி அடிப்பீங்க அட்லி: கலாய்க்கும் நெட்டிசன்கள்

இயக்குனர் அட்லி என்றாலே காப்பி என்று நெட்டிசன்கள் பட்டப்பெயர் வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே
 

. அவர் இயக்கிய முதல் படமான ’ராஜா ராணி’ படம் ’மௌன ராகம்’ படத்திலிருந்தும், இரண்டாவது படமான ’தெறி’, சத்ரியன்’ படத்திலிருந்தும், மூன்றாவது படமான மெர்சல்’, அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்தும் நான்காவது படமான பிகில், ஷாருக்கானின் ஹிந்தி படத்தில் இருந்து காப்பி அடித்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்ரனர்.

இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ-பிரியா தம்பதியினர் சமூக வலைத்தளத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்து வைரலாகினர். அதில் மாஸ்டர் படத்தின் நேற்று வெளியான பாடல் வரிகளையும் குறிப்பிட்டு மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடுவதைம் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அட்லீ மற்றும் பிரியா பதிவு செய்த இரண்டு டுவீட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அட்லியின் காதலர் தின புகைப்படம் கூட காப்பி என்பதை நெட்டிசன் ஒருவர் ஆதாரத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அட்லி தனது மனைவி ப்ரியாவின் கன்னத்தை பிடித்தவாறு போஸ் கொடுத்து புகைப்படம், அதற்கு முன்னர் ஒருசில மணி நேரத்துக்கு முன்னாள் காதலர்கள் இருவர் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது என்றும், அந்த புகைப்படத்தை பார்த்து காப்பியடித்து தான் அட்லி இந்த போஸ் கொடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்

அட்லி திரைப்படத்தை தான் காப்பி அடித்து இயக்குகின்றார் என்றால் காதலர் தின போஸ்களை கூட காப்பி அடிப்பதா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் அட்லியின் ரசிகர்களோ, அட்லியின் புகைப்படத்தை தான் அந்த காதலர்கள் காப்பி அடித்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News