×

கோலியின் பட்டர் பிங்கர்ஸ்….தோல்விக்கு முழ்க்காரணம் அவர்தான் – கடுப்பான ரசிகர்கள்!

கோலி ராகுலின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டதே அணியின் தோல்விக்கான காரணமாக  அமைந்தது.

 

கோலி ராகுலின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டதே அணியின் தோல்விக்கான காரணமாக  அமைந்தது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கே எல் பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. அதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது கே எல் ராகுலின் மிரட்டலான சதம்தான். அதே போல ஆர் சி பி அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார் கோலி.

கே எல் ராகுலின் இரண்டு அடுத்தடுத்த கேட்ச்களை விட்ட கோலி அதற்கு தண்டனையாக இந்த தோல்வியை பெற்றார். கோலி விட்ட கேட்சுகளுக்கு பின்னர் ராகுல் சுமார் 50 ரன்களை கடைசி இரண்டு ஓவரில் அடித்து துவம்சம் செய்தார். அதே போல பேட்டிங்கிலும் கோலி மிக மோசமாக விளையாடினார். இதன் மூலம் அணியின் தோல்விக்கு கோலியே காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News