×

திரும்ப வந்துட்டேனு சொல்லு... மீண்டும் இன்ஸ்டாவில்  பிரியா வாரியர்!

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில் ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் ஒரே ஒரு சீன் மூலம் உலக முழுக்க பேமஸ் ஆகிவிட்டார். படம் ஹிட்டானதோ இல்லையோ? ஆனால், இந்தப் படத்தில் நடித்த இந்த ஜோடி ஹிட்டாகிவிட்டனர்.

 

அந்த ஒரு காட்சியினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது முதல் படமான  'ஒரு அடார் லவ்' மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

அந்த படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் திடீரென தனது இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லிவந்த வந்தநிலையில் தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார் பிரியா வாரியார்.

அதாவது "கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இருப்பினும், இது எனது தொழில்முறை இடம் என்பதால், நான் திரும்பி வந்துள்ளேன். லைக்ஸ், ஃபாலோஸ் மற்றும் வியூஸ் குறித்து நான் அழுத்தமாக இருப்பதாக உணர்ந்தேன். எனவே, லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால்  ஒரு சிறிய பிரேக் தேவைப்பட்டது. ஆனால், இந்த இரண்டு நாளில் இது குறித்து பலரும் பல கோணங்களில் எழுதியது தான் தனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News