மனைவி உயிருக்கு போராடிட்டு இருக்கா.. சிஎம் விஜய் சார் ஹெல்ப் பண்ணுங்க.. முத்துக்காளை உருக்கம்!..

 
மனைவி உயிருக்கு போராடிட்டு இருக்கா.. சிஎம் விஜய் சார் ஹெல்ப் பண்ணுங்க.. முத்துக்காளை உருக்கம்!..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடையே அறிமுகமானவர் முத்துக்காளை. தற்போது அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சோகச் சூழல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்காளை, ஆரம்பத்தில் ஸ்டண்ட் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். ஆனால் சினிமாவில் வாய்ப்பு பெற பல்வேறு சிரமங்களை சந்தித்தார். வாழ்க்கையை நடத்த ஏவிஎம் ஸ்டூடியோவில் சிறிய வேலைகளும் செய்துகொண்டிருந்த அவரது முயற்சிக்கு பலன் கிடைத்து, காதலுக்கு மரியாதை, யூத், பகவதி, தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக “செத்து செத்து விளையாடுவோமா” என்ற நகைச்சுவைக் காட்சி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.

இந்நிலையில் அவரது மனைவி மாலதிக்கு திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வருவதாகவும், சுயநினைவு இன்றி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மேல் சிகிச்சைக்கான உதவியை அரசு வழங்க வேண்டும் என முத்துக்காளை கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் கேட்டுக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web