×

காமெடி நடிகர் சூரியின் பரந்த மனதை பாராட்டும்  ரசிகர்கள்!

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் சூரி. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மதுரையில் ஹோட்டல் தொழிலை துவங்கினார். இதற்கிடையில் ஹீரோவாக நடிக்கவும் முயற்சித்து 6 பேக்ஸ் வைத்து மாஸ் காட்டினார்.

 

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்துவரும் சூரி தன் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோக்களை தினமும் வெளியிட்டதும் ரசிகர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் வருமானம் இழந்து பதிப்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்,  சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான நிவாரண பொருட்களை வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து உதவியிருக்கிறார். சூரியின் இந்த செயலை அவரால் பயனடைந்தோர் மட்டுமல்லாது இணையவாசிகள் பலரும் பாராட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News