
Cinema News
கமல், ரஜினி, விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் படங்களில் கலக்கிய மயில்சாமியின் நீங்கா நினைவுகள்
Published on
நகைச்சுவை நடிகர்கள் பலர் இருந்தாலும் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக கலைஞர்கள் மத்தியிலும் பெயர் வாங்கியவர் ஒரு சிலர் தான் இருப்பார்கள்.
அவர்களில் ஒருவர் மயில்சாமி. இவரது இந்த பேரும் புகழுக்கும் காரணம் அவரது உதவும் குணம் தான். சக கலைஞர்கள் யாராவது கஷ்டப்பட்டால் உடன் உதவும் குணம் கொண்டவர் மயில்சாமி.
எந்த வித பந்தாவும் இல்லாதவர். எளிமையான மனிதர். மிமிக்ரி செய்வதில் கைதேர்ந்தவர். முதலில் மேடை நாடகத்தில் நடித்து வந்தார். தாவணிக்கனவுகள் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.
அபூர்வசகோதரர்கள் படத்தில் கமலின் நண்பராக வந்து கலகலப்பூட்டுவார். ரஜினி, விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
Mayilsamy and Vivek
சின்னக்கலைவாணர் விவேக் உடன் இவர் நடித்த பல படங்கள் ரசிக்க வைத்தன. அந்த வகையில் விக்ரம் நடித்த தூள் படத்தில் இவரது நடிப்பு தூள் கிளப்பியது. வடிவேலுவுடன் இணைந்து தவசி, தலைநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பணக்காரன், வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜன், உழைப்பாளி, ஆசை, சின்னகவுண்டர், வால்டர் வெற்றிவேல், சிவாஜி, படிக்காதவன் உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இவர் கடைசியாக நடித்த படம் கிளாஸ்மேட். இதற்கு டப்பிங் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Classmate Dubbing
டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார். அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர் இவர் தான். கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், தேவதையைக் கண்டேன், தூள், கிரி, கண்களால் கைது செய், பொன்னியின் செல்வன், தலைநகரம், திமிரு ஆகிய படங்களில் காமெடி காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.
Mayilsamy2
எம்ஜிஆரின் தீவிர ரசிகர்…கலைஞரின் குரலை மேடைகளில் பேசி அசத்துவார். காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்துவார்.
உலகநாயகன் கமல் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் உதவும் சிந்தையால் நினைக்கப்படுவார் என்று பதிவிட்டுள்ளார்.
இவருக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். 2020ல் மூத்த மகன் அன்புவின் நடிப்பில் அல்டி என்ற படம் வெளியானது.
இளையமகன் யுவன் தண்டகாரண்யம் படத்தில் நடித்து வருகிறார். அதியன் ஆதிரை இயக்கிய இப்படத்தில் மயில்சாமியும் நடிப்பதாக இருந்தது.
தீவிர சிவபக்தரான இவர் நேற்று சிவராத்திரியின் போது கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பினார். இன்று (19.02.2023) அதிகாலையில் 3.30 மணிக்கு குடும்பத்தினருடன் இட்லி சாப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரது மரணம் திரையுலகினருக்கு தாங்க முடியாத பேரிழப்பாக உள்ளது.
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...