Connect with us

Gossips

10 படத்துக்கு ஒரு படம் தான் தேறுது!.. முழு சம்பளத்தை கேட்ட காமெடி நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்?

காமெடி நடிகர் வாங்கிய சம்பளம் அளவுக்கு கூட அவர் நடித்த படம் ஓடவில்லை என்பதால் தயாரிப்பாளர் இன்னமும் முழு சம்பளத்தை கொடுக்கவில்லை என்கிற பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது என கிசுகிசு கிளம்பி உள்ளது.

காமெடி நடிகராக இருந்தது வரை அவருக்கான சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிலைமையே மாறிவிட்டது என்கின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் திலகத்தையே டென்ஷனாக்கிய வைகைப்புயல்… படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

ஹீரோவாக ஒரு படத்துக்கு பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த போட்டி நடிகருக்கு இணையாக கெத்துக் காட்டலாம் என நினைத்து வந்த நடிகருக்கு பட்டை நாமத்தை போட்டு விட்டனர் எனக் கூறுகின்றனர்.

சமீபத்தில் வெளியான படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தில் வெறும் 60 சதவீதம் சம்பளத்தை மட்டுமே தயாரிப்பாளர் தந்திருப்பதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது. பாக்கி 40 சதவீத சம்பளத்தை எப்போ தருவீங்க என சமீபத்தில் தயாரிப்பாளரை சந்தித்து காமெடி நடிகர் கேட்ட நிலையில், உனக்கு கொடுத்த 60 சதவீதம் கூட படத்திற்கு வசூல் வரலையே தம்பி இப்போ வந்து ஏன் கேட்கிற, அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என சொல்ல பிரச்சனையாகி விட்டதாம்.

இதையும் படிங்க: இன்னும் 4 வருஷம் ஆகுமா?.. துண்டு இல்லை.. பெட்ஷிட்டே விழும் போல.. விடுதலை 2வுக்கு கிடைக்குமா விடுதலை?

கூடிய சீக்கிரத்தில் முழு சம்பளத்தை கொடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போகிறேன் என்றும் நடிகர் மிரட்டி விட்டு வந்திருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. 10 படத்துக்கு ஒரு படம் தான் ஹிட் கொடுக்கிற, இவ்ளோ சம்பளமே உனக்கு ஜாஸ்தி என எகிறிய தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் பற்றி முறையிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top