Connect with us

Cinema News

ஹீரோ, காமெடி என கலக்கும் சந்தானம் இந்த நிலைக்கு வந்தது எப்படி?

நகைச்சுவை நடிகர்களில் சற்று மாறுபட்ட நகைச்சுவையில் கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் கவுண்டமணி சாயலில் கவுண்டர் கொடுத்து காமெடி செய்யும் வேலையை செய்து வந்தார். அது அவருக்கே ஒரு கட்டத்தில் போரடிக்க ட்ராக்கை மாற்றி ஹீரோவாகி விட்டார். இதுகுறித்து அவரே என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஒரு விஷயம் நல்லா போயிக்கிட்டு இருக்கும்போது ஒரு முடிவை எடுக்க எல்லோரும் தயங்குவாங்க…நீங்க எப்படி அந்த முடிவை எடுத்தீங்கன்னு கேட்கும்போது அந்த முடிவு…அந்த தைரியம் நாம எடுக்கலன்னா நம்மள ஆடியன்ஸ் தூக்கி வெளியே போட்ருவாங்க.

santhanam4

நம்மள வந்துட்டு இல்லாம ஆக்கிடுவாங்க. ஏன்னா ஒரு விஷயம் போரடிக்குதுங்கற போது அதையும் மீறி இல்ல…இன்னும் கொஞ்ச நாள் ஓடலாம்…நல்லா பண்ணலப்பான்னு சொல்ற வரைக்கும் ஓடலாம் கூடாது.

காமெடி எல்லாரோடயும் சேர்ந்து பண்ணி பண்ணி எனக்கே ரிபிடேஷன்…போரடிக்க ஆரம்பிடுச்சு. நான் இன்னும் அதே மாதிரி பண்ணிருந்தேன்னா இந்நேரம் சொல்ல ஆரம்பிச்சிருப்பாங்க. அதையே தான் பண்ணிக்கிட்டு இருக்காருன்னு. அதனால சொல்றதுக்கு முன்னாடி நானே சேஞ்ச் பண்ணிக்கிட்டேன்.

முதல்ல பாடி லுக் வைஸ பிரேமுக்குள்ள கொண்டு வரணும். அப்புறம் பாடி லாங்குவேஜ். அப்புறம் தொப்பை…இல்லாம ஹீரோ அளவுக்கு கொஞ்சம் பிட்டா வச்சிக்கிடணும். நல்லா உடற்பயிற்சி செய்யணும். அப்புறம் டேன்ஸ்…பைட்…இந்த மூணு தான் மேஜர். இந்த மூணுமே எப்பவும் கரெக்டா வச்சிக்கிடணும்.

santhanam3h

பைட் பண்ணும்போது ஒரு பஞ்ச் அடிச்சாலும் கரெக்டான இதுல போணும். அதுலயும் கொஞ்சம் மிஸ் ஆனாலும் காமெடி பைட்டா போயிடும். சோ இவ்ளோ விஷயங்கள் ஹார்டு ஒர்க் பண்ணித்தான் சேஞ்ச் ஓவர் பண்ணிருக்கேன். இனிமே இப்படி தான்., தில்லுக்கு துட்டு என 2 படங்களுமே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. கவுண்டர் கொஞ்சம் வேற விதமா அடிச்சிருப்பேன். அப்புறம் சீக்குவன்ஸ் காமெடி இருந்திருக்கும்.

சோ அந்த பழைய காமெடி சந்தானம் உள்ளுக்குள்ள அப்படியே தான் இருக்கான். வெளியே சாங்ஸ், டேன்ஸ், பைட்டுக்கு கொஞ்சம் ஹீரோவுக்காக ஆல்டர் பண்ணிருக்கேன். அதே சந்தானம் இன்னும் உள்ள ஜாலியா சிரிச்சிக்கிட்டு கலகலப்பா சந்தோஷமா இருக்கான்.

ஹீரோவானதுக்கு அப்புறம் உடம்ப இன்னும் நல்லா கொண்டு வரணும். இன்னும் நல்லா பைட் பண்ணனும். நல்லா காமெடி பண்ணனும். இன்னும் நல்லா ஸ்ட்ரக்சரக் கொண்டு வரணும். எல்லாமே நல்லா பண்ணனும்.

இன்னும் எவ்வளவு விஷயங்கள் இந்த நாட்டுக்குப் பண்ணப் போற…ஏன்னா எனக்கே தெரியல. தலைவன்…தலைவன்னு போய்க்கிட்டே இருக்கறீயேன்னு விஷாலப் பார்த்துக் கேட்கணும்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top