Categories: Cinema News latest news

நமீதாவை பத்தி அசிங்கமா பேசுனார்… காசுக்காக இப்படியா?… பயில்வான் மேல் பாயும் பிரபல காமெடி நடிகர்..

நடிகரும் பிரபல சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர். இவரது வீடியோக்களில் பல நடிகைகளை பற்றி பேசுவது எப்போதும் சர்ச்சையில் போய் முடியும்.

சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் “இரவின் நிழல்” திரைப்படத்தை குறித்து பேசியபோது ரேகா நாயர் நடித்த காட்சி குறித்து விமர்சித்தார். அதனை தொடர்ந்து ரேகா நாயருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் கடும் விவாதங்கள் எழுந்தது. அந்த வீடியோ இணையத்திலும் தீயாக பரவியது.

மேலும் பயில்வான் ரங்கநாதன் சினிமா விழாக்களில் பல இயக்குனர்களிடம் எழுப்பிய கேள்விகளும் மிகவும் வைரல் ஆகியது. குறிப்பாக இயக்குனர் பாலா தயாரித்த “பிசாசு” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில்  “பிசாசு என்று படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதனால் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்களா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த பாலா “பிசாசு என்றால் கருப்பாகத்தான் இருக்க வேண்டுமா? பிங்க் கலர் சட்டை கூட அணிந்திருக்கலாம்” என பயிவான் ரங்கநாதன் அணிந்து வந்த சட்டையை குறிப்பிட்டு கேலியாக பதிலளித்தார். இந்த வீடியோ இப்போது வரை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் டெலிஃபோன் ராஜ் “பயில்வான் ரங்கநாதனுக்கு வயசாகிவிட்டது. அவரால் ஒழுங்காகவும் நிக்கமுடியாது. மேலும் அவருக்கு டயலாக்கும் மனப்பாடம் பண்ண தெரியாது. ஆனால் அவரது குடும்ப குட்டிகளை காப்பாற்ற வேண்டும். யூட்யூப் சேன்னலில் பேசினால் கொஞ்சம் பணம் கிடைக்கும்.

இந்த பணத்துக்காக நடிகர் நடிகைகள் குறித்து தவறாக பேசி வருகிறார் பயில்வான். பயில்வானே மிகவும் கேவலமான ஆள்தான். ஒருமுறை நமீதாவின் உடல் மிகவும் எடுப்பாக இருக்கும் என ஒரு வீடியோவில் அவர் கூறினார். அப்படி என்றால் இவரும் நடிகைகளை அப்படி ரசிப்பவர்தானே. அடுத்தவர் படுக்கையறையில் எதற்காக அவர் நுழைகிறார்?” என சொற்களால் கடும் தாக்குதல் விடுத்தார். பயில்வான் ரங்கநாதன் குறித்து எப்போதும் இணையத்தில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில் டெலிஃபோன் ராஜ் இவ்வாறு விமர்சித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Published by
Arun Prasad