×

கவுண்டமணி-செந்தில் காமெடிக்கு  வலு சேர்த்த காமெடி எழுத்தர் வீரப்பன்

80களில் காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய எழுத்தர் வீரப்பன் பற்றிய கட்டுரை
 
comedy script writer veerappan

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 1933ம் ஆண்டில் பிறந்தவர் காமெடி எழுத்தாளர் வீரப்பன். இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி எழுத்தராக பணிபுரிந்தார். இதில் நடிகர் நாகேஷ் நடித்த படங்களும் அடக்கம். நாகேஷ் படங்களுக்கு காமெடி எழுதியது மட்டுமல்லாமல் சில படங்களில் அவருடன் தலைகாட்டியுள்ளார்.

பின்பு 70களில் மிகப்பெரும் காமெடி நடிகரான சுருளிராஜனுக்கு காமெடி எழுதியுள்ளார்.

script writer veerappan

ஆனால் 80களில் கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு இவர் எழுதிய காமெடிகள்தான் மிகப்பெரும் ஹிட் ஆனது. உதயகீதம் படத்தில் இவர் எழுதிய காமெடி கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு நன்றாக ஒர்க் அவுட் ஆகியது. அதன் பின் தான் கவுண்டமணியும், செந்திலும் அதிக படங்களில் இணைந்து காமெடி செய்யும் ட்ரெண்ட் உருவானது.

எழுத்தாளர் வீரப்பனின் எழுத்தில் வரும் காமெடி வழக்கமான கிச்சு கிச்சு மூட்டும் காமெடியாக இருக்காது. கொஞ்சம் சமுதாய கருத்துக்களையும் மூட நம்பிக்கைகளையும் சாடி எழுதி இருப்பார். உதாரணத்துக்கு சில படங்களில் பழைய பழமொழிகளை சாடுவார் ஏண்டா காலத்துக்கும் கண்டவன் சொன்னதையே கேட்டுக்கிட்டு அழுகுறிங்க சொந்தமா யோசிங்கடா என்று சில படங்களில் வசனம் இருக்கும் . இப்படி தவறாக சொல்லி வைத்த மூடப்பழக்க வழக்கங்களையும் மற்ற விசயங்களையும் கடுமையாக ஏசுவார். அதை கவுண்டமணி வேறு பேசுவதால் வசனம் நறுக்கென்று இருக்கும்.

nagesh script writer veerappan

நாகேசுடன் சோப்பு சீப்பு கண்ணாடி, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.குடியிருந்த கோவில் , உதய கீதம், செண்பகமே செண்பகமே வரை ஏராளமான படங்களில் நடித்தும் கதை வசனம் எழுதவும் செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கி மோகன் நடித்து வெற்றி பெற்ற இதயக்கோயில் படத்தில் கவுண்டமணி பாகவதர் போல காமெடி செய்திருப்பார். இப்படத்தில் கவுண்டமணியின் பாகவதர் காமெடிகள் நன்றாக இருக்கும். இதில் சலூன் கடை நடத்துபவராக கவுண்டமணி வருவார்.

மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் கவுண்டமணியின் காமெடி இவர்தான் எழுதினார். மோகனின் உதயகீதம் படத்தில் கவுண்டமணியும் செந்திலும் இவரது எழுத்தில் வந்த காமெடியில் கலக்கி இருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் மரத்துக்கு மரம் உண்டியல் வைத்து போலிச்சாமியாராக காமெடி செய்திருப்பார். தேங்காயில் பாம் இருக்கிறது என்று சொல்லி தேங்காய் விலையை சரித்து விடுவார். கவுண்டமணியின் வாயில் இருந்து வரும் வசனங்கள் எல்லாமே நறுக் நறுக்கென்று தேள் கொட்டியது போல இருக்கும் அதே நேரத்தில் நம்மை சிரிக்க வைக்கவும் தவறாது இப்படத்தில்  ஒரு காட்சியில் ஜெயிலில் இருக்கும் செந்தில் அங்கு இருக்கும் கவுண்டமணியை பார்த்து அண்ணே உங்க அட்ரஸ் தரிங்களா வெளியிலயும் வந்து உங்க கூட நட்பா இருக்கணுனே என்பார். ஆமா நீயும் நானும் கர்ம வீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும், நாட்டுக்கு நல்லது பண்றதுக்காகவே ஜெயிலுக்கு வந்திருக்கோம் நீ ஒரு முடிச்சவிக்கி நான் ஒரு மொள்ளமாரி இந்த சந்திப்பு வெளியில வேற தொடரணுமா போடா என்பார் இது போல வசனங்கள் தான் வீரப்பனின் சிறப்பு.

இளையராஜாவின் தயாரிப்பில் வந்து முரளி நடித்த கீதாஞ்சலி படத்தில் ஒரு வசனம்

இரண்டு பேர் குதிரையில ஏறிக்கிட்டு நாங்க தூய்மையான லவ்வர்ஸ் அப்படினு சொல்வாங்க இப்போ லவ்வர்ஸ்னு சொல்லுவிங்க அப்புறம் கல்யாணம் ஆயிடும் கொஞ்ச நாள் வாழ்விங்க அப்புறம் நாங்க பிரிஞ்சுட்டோம் இனி சேர்ந்துவாழ மாட்டோம் எங்களுக்குள்ள கருத்து ஒற்றுமையெல்லாம் இல்ல நாங்க நண்பர்களாவே இருப்போம் அப்படீனு பேட்டி கொடுப்பிங்க பிரிஞ்சுட்டா நாயி போகவேண்டியது தானே அப்புறம் என்ன நண்பர்கள் இப்போது கடுமையாக இருக்கும் இது போல கணவன் மனைவி பிரிவின்மையை 30 வருஷத்துக்கு முன்பே ஆய்வறிந்து தீர்க்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருப்பார் வீரப்பன் .

இவனுக மட்டும்தான் பொறந்தானுகளா இந்தியாவுல நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா அதாவது 35 வயசுக்கு மேல போங்கடானா போய் தொலைய மாட்டேங்கிறானுக அதே 35 வயசுலயே இருக்கானுங்க போன்ற புகழ்பெற்ற வசனங்களை எழுதியவர்.கரகாட்டக்காரன் படத்தில் இளையராஜாவின் பாடல்கள்,கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளால் படம் 400 நாட்களை கடந்து ஓடியது ஒரு காரணம் என்றாலும் இவரின் ஷார்ப்பான காமெடி வசனங்கள் தான் அந்த நகைச்சுவை காட்சிக்கே பலம் முக்கியமாக காலம் கடந்து நிற்கும் வாழைப்பழ காமெடி எல்லாம் இவர் எழுதியது தான்.

இன்று ஆயிரம் பேர் காமெடி செய்தாலும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல இவர் செய்த காமெடி என்றும் மண்ணை விட்டும் ரசிகர்களின் மனதை விட்டும் மறையாது.

முதுமை காரணமாக கடந்த 2005ம் ஆண்டு இவர் மறைந்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News