×

தளபதி எங்களுக்கு மாஸ்டர்..உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்.. அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடும் போஸ்டர்....

அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

சமீபத்தில் நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் என சமீபத்தில் வருமா.ன வரித்துறை அதிகாரிகள் ரவுண்டு கட்டி அடித்து 70 கோடிக்கும் மேல் அள்ளி சென்றனர். மேலும், அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது விஜயின் ஆடிட்டர் வருமான வரித்துறையில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

இந்த விவகாரம் விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காரணமாகவே அவர் பழிவாங்கப்படுகிறார் என அவர்கள் கருதுகின்றனர். எனவேதான், மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலியில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடினர்.

இந்நிலையில், ஒரு அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர். அதில் ‘ தளபதி என்றும் ரசிகர்களுக்கு மாஸ்டர் ஆக இருப்பதையே விரும்புகிறேம். தயவு செய்து அவரை உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் புதுக்கோட்டை விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News