×

இணையத்தில் வைரலாகும் தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸிற்காக காத்திருந்த வேலையில் கொரோனா நோய் தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அனைத்தையும் முடக்கிவிட்டது.

 

இதையடுத்து விஜய் தனது அடுத்தப்படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அந்த தினத்தில் மாஸ்டர் ட்ரைலர், அல்லது டீசர் ஏதுனும் வெளிவரும் என காத்திருந்த ரசிகர்ளுக்கு செம ஷாக்கிங் தகவல் ஒன்று விஜய்யிடமிருந்தே வந்தது.

ஆம், கொரோனா நோய் தொற்றினால் மக்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் பிறந்தநாள் கொண்டாடினால் நல்லதல்ல. எனவே இந்த வருடம் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் பாதுகாப்புடன் , பத்திரமாக இருங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்தார்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு   இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன்ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து உட்பட சினிமா துறையை சேர்ந்த  20 பிரபலங்கள் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர். இது ட்விட்டரில் ட்ரெண்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News