×

பாஜக திட்டங்களை எதிர்ப்பதா?... சூர்யாவுக்கு கண்டனம்.. எதிர்க்கும் நெட்டிசன்கள்...

 
suriya

நடிகர் சூர்யா நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை என ஒன்றிய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். மேலும், சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஒளிப்பதிவு வைரவு மசோதாவையும் அவர் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தார். சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காக்க வேண்டும். குரல்வளையை நெறிக்கக் கூடாது என கூறியிருந்தார். அவரின் சகோதரர் நடிகர் கார்த்தியும் இதை எதிர்த்து குரல் கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, சூர்யா உள்நோக்கத்துடன் மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக சூர்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜக செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், நெட்டிசன்கள் பலரும் பாஜகவினருக்கு எதிராகவும், சூர்யாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News