×

ரூ.1 ஒரு கோடி மோசடி... நடிகர் மீது தொழிலதிபர் மனைவி பரபரப்பு புகார்...

 
suresh

தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி நடித்த ‘ தர்மதுரை’ உள்ளிட்ட சில படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் டெரர் வில்லனாக நடித்து நடிகராக மாறினார். அதன்பின் விஷால் நடித்த மருது படத்தில் வில்லனாக நடித்தார். பின்னார் ஹீரோ அவதாரம் எடுத்து சில திரைப்படங்களில் நடித்தார்.   \கடந்த வருடம் இவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

rk suresh

இந்நிலையில், இவர் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், வங்கியில் ரூ.10 கோடி கடன் கொடுப்பதாக கூறி தனது கணவரிடம் ரூ.1 கோடி கமிஷன் வாங்கினார். சில ஆவணங்கள் மற்றும் நிரப்பப்படாத காசோலையில் கையெழுத்து வாங்கினார்.

rk suresh

ஆனால், கூறிய படி பணத்தை வாங்கி கொடுக்கவில்லை. கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தை எங்களின் பெயருக்கு ஒரு பத்திரவு பதிவு செய்து அதை வைத்து வங்கியில் பணம் பெற்றறுக்கொண்டு எங்களை ஏமாற்றியது தெரியவந்தது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் என் கணவர் இறந்துவிட்டார். பணத்தை கேட்டால் அவரின் அடியாட்கள் மூலம் என்னை மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, என் கணவர் கொடுத்த பணத்தை பெற்று தர வேண்டும் என அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News