×

இரவில் ஆண்களை வீட்டுக்கு அனுப்புகிறார்! - நடிகை மீது பரபரப்பு புகார்...

 
jayalakshmi

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியல் மூல இல்லத்தரசிகளிடம் நெருக்கமானவர் நடிகை ஜெயலட்சுமி. சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் கந்து வட்டி தொழிலையும் செய்து வருகிறார்.  சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

jayalakshmi

இவர் மீது சென்னை கமிஷனர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடி பகுதியை சேர்ந்த மகளிர் குழுவினர் சிலருக்கு இவர் பணம் கொடுத்துள்ளார். வங்கியில் லோன் பெற்று தந்ததாக கூறி அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அப்பெண்கள் மாதா மாதம் அதை அவருக்கு செலுத்தி வந்துள்ளனர். அசலை செலுத்திய பின்னரும், அது வட்டி மட்டும்தான், அசலை செலுத்துங்கள் என அப்பெண்களை மிரட்டியுள்ளார்.

jayalakshmi

அப்பெண்கள் மறுக்கவே இரவு நேரங்களில் ரவுடிகளை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி மிரட்டியுள்ளார். அதன்பின்னரே, வங்கியில் லோன் பெற்று அவர் பணம் தரவில்லை. கந்து வட்டிக்கு கொடுத்துள்ளார் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

எனவே, மகளிர் குழுவை சேர்ந்த கீதா என்கிற பெண் இந்த கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News